இன்று முதல் சென்னையில் ஒரு நாள் விட்டு ஒருநாள் தான் குடிநீர்
சென்னை:
சென்னை நகரில் இன்று முதல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் தொடங்கியது. பொதுமக்கள்மத்தியில் இதற்கு பெரும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
சென்னை நகருக்கு குடிநீர் வினியோகம் செய்யும் ஏரிகளில் நீர் இருப்பு வெகுவாக குறைந்துவிட்டது. இப்போதுஇருப்பில் உள்ள நீர் ஜூன் மாதம் வரை மட்டுமே போதுமானதாக இருக்கும்.
எனவே, அரசு இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கி விட்டது.
இதன் முதல் கட்டமாக குழாய்கள் மூலம் வினியோகிக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதுவரைதினசரி குடிநீர் வினியோகம் இருந்து வந்தது. இனி (சனிக்கிழமை முதல்) ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான்குழாய்களில் குடிநீர் வினியோகம் செய்யப்படவுள்ளது.
அதன்படி நாளை குடிநீர் வினியோகம் இருக்காது.
இந்தத் திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இப்போதே பல பகுதிகளில் தினசரி தண்ணீர் வருவதில்லை. இதனால் லாரிகளில் வரும் குடிநீரைத் தான் மக்கள்காசு கொடுத்து வாங்கி வருகின்றனர். இந் நிலையில் அதிகாரப்பூர்வமாகவே, ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர்வினியோகம் செய்தால் கடும் பாதிப்பு ஏற்படும் என்று மக்கள் புலம்புகிறார்கள்.
ஆனால், ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்தால்தான் ஜுன் வரையாவது தாக்குப் பிடிக்கமுடியும் என்று சென்னைக் குடிநீர் வாரியம் (மெட்ரோ வாட்டர்) கூறுகிறது.
குழாய்களில் தண்ணீர் வராத நாட்களில் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று கூறியுள்ளதுவாரியம் (இதற்கு எங்கிருந்து நீர் வரும் என்று தெரியவில்லை).
ஜூலையிலாவது மழை பெய்தால் தான் சென்னை தப்பும்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications