சம்பா கருகியதால் சோகம்: திருவாரூர் விவசாயி அதிர்ச்சியில் பலி

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தான் விதைத்த சம்பா பயிர்கள் கருகி, வயல் வறண்டு போய்க்கிடப்பதைப் பார்த்த அதிர்ச்சியில் விவசாயி ஒருவர் கடும் அதிர்ச்சியடைந்து மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

காவிரி டெல்டா பகுதிகள் வறண்டு போய்க் காணப்படுகின்றன. காவிரியில் கர்நாடக அரசு உரிய நேரத்தில்தண்ணீர் திறந்து விடாததாலும், பருவமழை பொய்த்து விட்டதாலும் விவசாயிகள் கடும்பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

வறண்டு போன வயல்களையும், அடைக்க முடியாத கடன்களையும் நினைத்து இதுவரை மூன்று விவசாயிகள்இறந்துள்ளனர். இம்மாதத் துவக்கத்தில் இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். சமீபத்தில் ஒருபெண் விவசாயி அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார். இப்போது 4வது சாவும் நிகழ்ந்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளாங்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயிதமிழரசன். இவருக்கு 9 ஏக்கர் நிலம் உள்ளது.

அவர் ரூ.50,000 வரை கடன் வாங்கி தன் நிலத்தில் சம்பா பயிரிட்டிருந்தார். ஆனால் தண்ணீர்ப் பற்றாக்குறையால்வயல் வறண்டு போனது.

இந்நிலையில தன் வயலைப் பார்க்க தமிழரசன் சென்றிருந்தார். அப்போது சம்பா பயிர்கள் கருகி, வறண்டு போய்க்கிடந்த வயலைப் பார்த்த அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து வீட்டுக்குத் திரும்பிய சிறிது நேரத்தில் சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார் தமிழரசன்.அவருக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

வறட்சியால் மனம் நொந்து இறந்த விவசாயிகளின் எண்ணிக்கை நான்காக உயர்ந்திருப்பது தஞ்சாவூர் மற்றும்திருவாரூர் மாவட்ட விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+