மதுரையில் தெப்பத் திருவிழா தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் இன்று தெப்பத் திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது.
மதுரை மாநகரின் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தெப்பத் திருவிழா. மீனாட்சி அம்மன் கோவிலின் துணைக்கோவிலான மாரியம்மன் கோவிலின் அருகே அமைந்துள்ள வண்டியூர் தெப்பக்குளத்தில், இந்தத் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.
இன்று காலை 10.45 மணிக்கு மேல் தெப்பத் திருவிழா தொடங்கியது. மீனாட்சி-சுந்தரேஸ்வரர் தெப்பத்தில்அமர்ந்து, வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கின்றனர்.
பின்னர் இன்று இரவு 8 மணிக்கு தெப்ப உலா நடைபெறும். தெப்பத் திருவிழாவையொட்டி தெப்பக்குளத்தில்தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. இங்கு நிரந்தரமாக தண்ணீரை நிரப்பி வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-->












Click it and Unblock the Notifications