இலங்கை: உளவு அதிகாரிகளுக்கு ரணில் எச்சரிக்கை
கொழும்பு:
விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்கும் இடையே நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளைக் குலைக்கும் வடிகசியும்செய்திகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று உளவுத் துறையினரை இலங்கை பிரதமர் ரணில்விக்கிரமசிங்கே கேட்டுக் கொண்டார்.
இலங்கை அரசின் கீழ் பணிபுரிந்து வரும் தமிழ் போலீசார் அனைவரும் தங்கள் பணிகளை ராஜினாமா செய்துவிட்டு, தங்களுடன் சேர வேண்டும் என்று புலிகள் கேட்டுக் கொண்டது போன்ற செய்திகள் நேற்றையநாளிதழ்களில் வெளியாகி இருந்தன.
ஆனால் இந்தச் செய்திகளை இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சகம் பின்னர் உறுதியாக மறுத்தது.
இந்தச் செய்திகளைக் கேள்விப்பட்டதும் இலங்கை உளவுத் துறை அதிகாரிகளை அழைத்து அவர்களுடன்பேசினார் ரணில்.
உண்மையான காரணம், ஆதாரம் எதுவும் இன்றி வெளியாகும் இதுபோன்ற செய்திகள் எப்படிக் கசிகின்றனஎன்பதை உளவுத் துறை அதிகாரிகள்தான் கண்டுபிடித்து, அவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று ரணில்அப்போது அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
இதுபோன்ற செய்திகள் தற்போது நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளைக் குலைத்துவிடும் என்றும் ரணில்அப்போது எச்சரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications