சாத்தான்குளத்தில் அதிமுக வெற்றியை தடுக்க முடியாது: அமைச்சர்
தூத்துக்குடி:
சாத்தான்குளத்தில் அதிமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்கூறியுள்ளார்.
அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக் குழுவின் துணைத் தலைவர் இவர் தான். தலைவராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இரு அமைச்சர்கள் தவிர மேலும் சில அமைச்சர்களும் கட்சியின்பெருந்தலைகளும் இக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சாத்தான்குளத்திலேயே கேம்ப் அடிக்குமாறு கட்சித் தலைமைகட்டளையிட்டுவிட்டது. இதனால், அவர் கடந்த 10 நாட்களாக சாத்தான்குளத்திலேயே குடி இருந்து வருகிறார்.
இத் தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள நாடார் சமூகத் தலைவர்களைச் சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவுதருமாறு கேட்டு வருகிறார் ராதாகிருஷ்ணன். இவரும் அதே சமூகத்தைச் சேர்ந்தவர் தான்.
நேற்று சாத்தான்குளத்தில் அதிமுக தேர்தல் பணிக் கூட்டத்தை அமைச்சர் நடத்தினார். அவர் பேசுகையில்,சாத்தான்குளத்தில் அதிமுக சார்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் அவரது வெற்றிக்காக தொண்டர்கள்முழு மூச்சாக பாடுபட வேண்டும்.
காங்கிரஸ், திமுக வேட்பாளர்களின் டெபாசிட்டுகள் பறிபோகும் அளவுக்கு அதிமுகவின் வெற்றி அமையவேண்டும்.
மணிமுத்தாறு அணையிலிருந்து சாத்தான்குளம் தொகுதிக்கு குடிநீர் கொண்டு வருவதற்கு அதிமுக அரசுநடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.
கூட்டத்தில் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், அன்வர் ராஜா, வளர்மதி, கருப்பசாமி, நைனார் நிாகேந்திரன், சம்பத்உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
-->












Click it and Unblock the Notifications