துபாயில் இந்திய தொழிபதிபர் சுட்டுக் கொலை: தாவூதுக்கு நெருக்கமானவர்

Subscribe to Oneindia Tamil

துபாய்:

துபாயில் வசித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் அந் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். தாவூத் இப்ராகிம் கும்பலுடன்நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர் இவர். இதனால் தாவூதுக்கு எதிரான தாதா கும்பல் அவரைக் கொன்றிருக்கலாம் என்று தெரிகிறது.

நேற்றிரவு 9 மணியளவில் இந்திய நைட் கிளப்புக்குள் நுழைந்த அவரை அடையாளம் தெரியாத இருவர் சுட்டுக் கொன்றுவிட்டுத்தப்பிவிட்டனர்.

துபாயின் மிகப் பெரிய இந்தியப் பள்ளிக்கு அருகில் இந்த இரவு விடுதி உள்ளது. இதுவும் இந்தியர்களால் தான் நடத்தப்படுகிறது. வார இறுதிநாட்களில் இந்தியத தொழிலதிபர்களும் இந்தியத் தூதரக அதிகாரிகளும் கூட இந்த கிளப்புக்கு வந்து செல்வது வழக்கம்.

அன்னா ஷெட்டி என்று அழைக்கப்படும் சரத் ஷெட்டிக்கும் மும்பை தாதா தாவூத் இப்ராகிமுக்கும் தொடர்பு இருந்து வந்தது. இதனைஇந்திய உளவுப் பிரிவுகள் உறுதி செய்தன. இதனால் அவரை தாவூதுக்கு எதிரான சோட்டா ராஜன் கும்பல் தான் சுட்டுக் கொன்றிருக்கவேண்டும் என்று இன்டலிெஜென்ஸ் பீரோ கருதுகிறது.

தாவூத் உள்பட பல அண்டர்வோர்ல்ட் கும்பல்களுக்கும் துபாய் தான் புகலிடமாக இருந்து வருகிறது.

இதில் சிலரை அந் நாடு இந்தியாவிடம் பிடித்து ஒப்படைத்துவிட்டது. ஆனால், தாவூத் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு துபாயின் ஆதரவுதொடர்கிறது. துபாயில் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஹோட்டல் தொழில்களிலும் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளார் தாவூத்இப்ராகிம்.

இப்போது தாவூத் பாகிஸ்தானில் அந் நாட்டு ராணுவப் பாதுகாப்புடன் கராச்சி நகரில் வசித்து வருகிறான். இவனது துபாய் முதலீடுகளைஅவனது தம்பி அனீஸ் இப்ராகிம் தான் கவனித்து வருகிறான்.

சமீபத்தில் பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு வந்த அனீஸை சி.பி.ஐ. மற்றும் இன்டர்போல் வற்புறுத்தலால் துபாய் கைது செய்தது. ஆனால்,அவனை இந்தியாவிடம் ஒப்படைக்காமல் திரும்ப பத்திரமாக பாகிஸ்தானுக்கே அனுப்பி வைத்தது துபாய் அரசு.

இந் நிலையில் தாவூதுக்கு நெருங்கிய தொழிலதிதிபரான ஷெட்டி கொல்லப்பட்டுள்ளார். இவர் தாவூதின் பினாமியாக இருக்கலாம் என்றும்கூறப்படுகிறது. தாவூதின் பணத்தை துபாயில் இவர் வட்டிக்கும் விட்டு வந்தார்.

தாவூதின் ஆட்கள் சோட்ட ராஜனைக் கொல்லவும் சோட்டா ராஜன் கும்பல் தாவூதின் ஆட்களைக் கொல்லவும் தொடர்ந்து முயன்றுவருகின்றன. கடந்த 2000ம் ஆண்டு செப்டம்பரில் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வைத்து சோட்டா ராஜனைக் கொல்ல தாவூதின்ஆட்கள் முயன்றது நினைவுகூறத்தக்கது.

இதற்குப் பதிலடியாகவே அன்னா ஷெட்டி கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. அதே நேரத்தில் தாவூத் கும்பலே கூட இவரைக்கொன்றிருக்கலாம் எனவும் மும்பை போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

துபாயில் சமீபத்தில் தாவூதின் தம்பி அனீஸ் இப்ராகிம் கைது செய்யப்பட்டபோது, அன்னா ஷெட்டி தான் அவரைக் காட்டிக் கொடுத்ததாகதாவூத் கும்பல் நினைத்தது. இதனால் அவரைத் தீர்த்துக் கட்டியிருக்கலாம் என்று மும்பை போலீசார் கூறுகின்றனர்.

சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல், ஆட்களைக் கடத்தி பணம் பறித்தல் என இந்த இரு கும்பல்களுமேகோடிக்கணக்கான பணத்துடனும் பலத்துடனும் இயங்கி வருகின்றன.

இவர்களது ஆட்கள் பல்வேறு நாடுகளில் ஒருவரை ஒருவர் கொல்ல முயல்வது இப்போதெல்லாம் மிகவும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.

சோட்டா ராஜன் தாவூதுடன் தான் சேர்ந்து இருந்தான். மும்பை குண்டு வெடிப்புக்குப் பின் தாவூதிடம் இருந்து பிரிந்து தனியே ராஜாங்கம்நடத்தி வருகிறான் சோட்டா ராஜன்.

அன்னா ஷெட்டியின் கொலை குறித்து துபாய் போலீசின் உதவி கமாண்டர் ஜெனரல் ஷராபுதீன் ஹூசைன் கூறுகையில், கொலைக்கானகாரணம் தெரியவில்லை. இதுவரை யாரும் கைது செய்யப்படவும் இல்லை. ஆனால், சில துப்புக்கள் கிடைத்துள்ளன. விசாரணைதொடர்ந்து நடந்து வருகிறது என்றார்.

தாய்லாந்தில் சோட்டா ராஜனைக் கொல்ல நடந்த முயற்சியில் அன்னா ஷெட்டி பெரும் பங்கு வகித்ததாகவும் கூறப்படுகிறது. மும்பையில்ஹோட்டல் ஒன்றையும் நடத்தி வந்த அன்னா ஷெட்டி 1987ம் ஆண்டில் துபாயில் குடியேறினார்.

தாவூத் இப்ராகிமுக்காக மும்பையில் ஹோட்டல் முதலாளிகளை மிரட்டி பணம் பறித்து வந்தார் ஷெட்டி.

இவரது கொலையால் துபாயில் உள்ள இந்திய தொழிலதிபர்களிடையே பெரும் அச்சம் பரவியுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+