அஸ்திவாரம் தோண்டும்போது மண் சரிந்து 2 தொழிலாளர்கள் பலி
சென்னை:
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் அடுக்குமாடி ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்ட அஸ்திவாரம் தோண்டும்போது மண்சரிந்து, 2 தொழிலாளர்கள் பரிதாபமாக மண்ணுக்குள் புதைந்து இறந்தனர்.
ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் அடுக்குமாடி ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக அஸ்திவாரம்தோண்டப்பட்டு வந்தது. தோண்டப்பட்ட மண் அதன் அருகிலேயே குவிக்கப்பட்டு வந்தது.
இன்று காலை தொழிலாளர்கள் தொடர்ந்து மண்ணைத் தோண்டிக் கொண்டிருந்தபோது மேலே குவிக்கப்பட்டுவந்த மண் திடீரென சரிந்தது. இதில் 5 தொழிலாளிகளும் மண்ணுக்குள் புதைந்தனர்.
இவர்களில் 2 பேர் மூச்சு முட்டி சிறிது நேரத்தில் இறந்தனர். மற்ற மூன்று பேரும் அருகில் இருந்தவர்கள்உதவியுடன் மண் குவியலில் இருந்து மீட்கப்பட்டுவிட்டனர். இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு வரைமுறைகளை உரிய முறையில் அமலாக்காமல் வேலை பார்த்தது தான் இந்தச் சாவுக்குக் காரணம்என அடையாறு காவல் நிலைய துணை கமிஷ்னர் துரையரசன் நிருபர்களிடம் தெரிவித்தார். இது தொடர்பாககட்டட உரிமையாளர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
-->












Click it and Unblock the Notifications