சாத்தான்குளம் இடைத் தேர்தலை புறக்கணிக்கிறது திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சாத்தான்குளம் இடைத் தேர்தலை திமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

இன்று காலை அண்ணா அறிவாயத்தில் தொடங்கிய திமுகவின் உயர் மட்ட செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மறைமுகமாக பா.ஜ.கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே திமுக போட்டியிடுவதைத் தவிர்த்துள்ளதாகத் தெரிகிறது.

சாத்தான்குளத்தில் வரும் பிப்ரவரி 26ம் தேதி இடைத் தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு அதிமுக தனித்துப் போட்டியிடப போவதாகஅறிவித்துவிட்டது. அதே போல கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவுடன் காங்கிரசும் போட்டியிடுகிறது. பா.ஜ.கவும் தனித்துப் போட்டி எனஅறிவித்துவிட்டது.

ஆனால், திமுக மட்டுமே ஆழ்ந்த அமைதியில் இருந்து வந்தது. கடந்த வாரம் திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் அலுவலகஅமைச்சரான விஜய்கோயல் வாஜ்பாயின் தூதுவராக வந்து சந்தித்துவிட்டுப் போனார். அன்று முதல் திமுக- பா.ஜ.க இடையிலான உறவுமீண்டும் சீராக ஆரம்பித்துள்ளது.

அந்தச் சந்திப்பின்போது சாத்தான்குளம் இடைத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு விஜய்கோயல் ஆதரவு கேட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அதைகருணாநிதியும் விஜய்கோயலும் மறுத்தனர். இந் நிலையில் எதிர்பார்க்கப்பட்டது போலவே இத் தொகுதியில் பா.ஜ.கவுக்கு எதிராகப்போட்டியிடுவதை திமுக தவிர்த்துள்ளது.

இது குறித்து இன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக செயல் திட்டக் கூட்டத்தில் காரசாமான விவாதம் நடந்தது. கருணாநிதிதலைமையில் நடந்த இக் கூட்டத்தில் பொது செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஆறாகாடு வீராசாமி, மூத்த தலைவர்களான துரைமுருகன், பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம், கே.என். நேரு, இளைஞரணித் தலைவர் ஸ்டாலின் உள்பட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி,

சாத்தான்குளத்தில் நியாயமான தேர்தல் நடக்கப் போவதில்லை. அங்கு போலி வாக்காளர்களைச் சேர்க்கவும் தங்களுக்கு வேண்டாதவாக்காளர்களை நீக்கும் பணியிலும் மாநில அரசு ஈடுபட்டுள்ளது.

தேர்தல் விதிமுறைகளுக்குப் புறம்பாக அமைச்சர்கள், அரசு ஊழியர்கள், காவல்துறையினர் தலைமையில் அதிமுக ஆட்சியாளர்கள்விதிமீறல் நடவடிக்கைகள் ஈடுபட்டுள்ளனர். இதனால் சாத்தான்குளத்தில் ஜனநாயகப் பூர்வமாக, விதிமீறல் இல்லாத தேர்தல் நடக்காது என்றநிலையில் தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிப்பது என்று திமுக முடிவு செய்துள்ளது.

போலி வாக்காளர்களை வைத்து கள்ள ஓட்டுப் போட வைப்பதற்கு வசதியாக, புகைப்பட அடையாள அட்டை இல்லாதவர்கள் 16 விதமானசான்றுகளில் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் விதி மீறல் நடவடிக்கைகளில் அரசுஈடுபட்டுள்ளது. இது சட்டவிரோதமானது மட்டுமல்லாது அப்பட்டமான முறைகேடும் ஆகும். எனவே, சாத்தான்குளம் தேர்தல் சுதந்திரமானமுறையில் நடக்கும் என்பதை துளியும் எதிர்பார்க்க முடியாது.

16 விதமான சான்றுகளுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெவித்தால் அவர்களை குண்டர்களை வைத்தும், போலீஸாரை வைத்து அடித்துஉதைக்கவும் ஆட்சியாளர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று கடந்த முறை வாக்களித்திருந்த 24,000 வாக்காளர்களின் பெயர்கள் இந்த முறை விடுபட்டுள்ளது.மேலும், தமிழகம் முழுவதிலும் அமல்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்டது. பின்னர் அதைஅமல்படுத்த தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது. இதுவும் விதி மீறல் ஆகும்.

அமைச்சர்களையும் அரசு அதிகாரிகளையும் சாத்தான்குளத்தில் குவித்து அனைத்து விதமான முறைகேடுகளையும் செய்து வருகிறார்கள்.இதனால் அங்கு தேர்தலையே அதிமுக தான் நடத்தப் போகிறது.

இந்த முறைகேடுகள் குறித்து டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனிடம் புகார் செய்ய தலைமைக் கழக உறுப்பினர்கள் அங்குவிரைந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் திமுக வழக்குத் தொடரும் என்றார் கருணாநிதி.

இந்த மக்கள் விரோத பாசிச அரசை ஒட்டுமொத்தமாகவே விரட்டி அடிக்க ஒட்டுமொத்த மக்கள் சக்தியை ஓரணியில் திரட்டும் வேலையில்திமுக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நேரத்தில் நமது கவனத்தை சிதறிடிக்கும் வகையில் வந்துள்ள இத் தேர்தலை திமுக புறக்கணிக்கிறது.

இத் தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு தருவீர்களா என்று நிருபர்கள் கேட்டபோது, காங்கிரஸ் கூட்டணியில் திமுக இல்லை என்றார்.

தேர்தலைப் புறக்கணிப்பதில் உள்நோக்கம் ஏதும் உள்ளதா, இது பா.ஜ.கவுக்கு ஆதரவான முடிவா என்று கேட்டபோது, இதில் எந்தஉள்நோக்கமும் மறைமுகத் திட்டமும் இல்லை. மாநில பா.ஜ.கவுடன் திமுகவுக்கு எந்த தேர்தல் உடன்பாடு கிடையாது.

தேர்தலில் தோல்வி அடைவோம் என்பதற்காக நாங்கள் தேர்தலை புறக்கணிக்கவில்லை. ஜனநாயகரீதியில் அங்கு தேர்தல் நடைபெறாதுஎன்பதற்காகத்தான் தேர்தலைப் புறக்கணிக்கிறோம்.

மாநில பா.ஜ.கவினரை அடக்கி வைப்பதாகவும் திமுகவுக்கு உரிய மரியாதை தரவும் அதிமுகவிடம் இருந்து ஒதுங்கி இருப்பதாகவும்பிரதமர் வாஜ்பாய் தரப்பில் இருந்து உறுதிமொழி தரப்பட்டதால் சாத்தான்குளத்தில் பா.ஜ.கவை எதிர்த்துப் போட்டியிடுவதை திமுகதவிர்த்துள்ளதாகக் கருதப்படுகிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+