சம்பா சோகம் தொடர்கிறது: 5வது விவசாயி பரிதாப மரணம்

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்:

காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் சாவு தொடர்கதையாகி வருகிறது. இப்போது 29 வயதான ஒருவிவசாயியும் இறந்துள்ளார். இதன்மூலம் இதுவரை 5 விவசாயிகள் இந்த சம்பா சோகத்துக்கு பலியாகியுள்ளனர்.

காவிரி நீர் இல்லாததால், வயல்கள் கருகிக் கிடக்கின்ற காட்சியைப் பார்த்து காவிரி டெல்டா பகுதி விவசாயிகள்மனம் நொடித்துள்ளனர். இந்த அதிர்ச்சியால் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். மேலும் 2 பேர் சரியாகஉண்ணாமலும் சோகத்திலும் மயங்கி விழுந்து இறந்தனர்.

இந் நிலையில் திருத்தறைப்பூண்டி அருகே உள்ளது தபூநாயக்கர் புரத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியும் மாரடைப்புவந்து இறந்தார். அவருக்கு 29 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வேலுச்சாமி என்ற அந்த 29 வயது இளம் விவசாயிய குத்தகை அடிப்படையில் 12 ஏக்கர் நிலத்தில் சம்பா பயிர்சாகுபடி செய்திருந்தார். இதற்காக ரூ. 1.5 லட்சம் வரை கடன் வாங்கி செலவழித்திருந்தார். ஆனால், பயிர்கள்கருகிக் கிடந்ததைப் பார்த்த அவர் மனம் உடைந்தார்.

இவ்வளவு செலவு செய்தும் இப்படியாகி விட்டதே என்று நொந்து போன அவர் வயலில் இருந்து அழுதபடியேவீட்டுக்குத் திரும்பினார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாகஇறந்தார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+