திருச்சி சிறையில் கொளத்தூர் மணி

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

விடுதலைப் புலிகளுக்கு கார் மற்றும் வெடிகுண்டுகள் கொடுத்தது தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்கில்கொளத்தூர் மணி திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

இதற்காக இவர் கர்நாடக மாநிலம் பெல்லாரி சிறையில் இருந்து திருச்சிக்குக் கொண்டு வரப்பட்டார். கர்நாடகத்தில்காவல் நிலையங்களைத் தாக்கத் திட்டமிட்ட வழக்கில் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை தூதுவராக அனுப்பினால் தான் நாகப்பாவை விடுவிப்பேன் என் கடத்தல் மன்னன் கூறி வந்தான். ஆனால்,பல வழக்குகளில் இவருக்கு ஜாமீன் கிடைப்பதற்கு காலதாமதம் ஆனது. இந் நிலையில் நாகப்பா மர்மமானமுறையில் இறந்து கிடந்தார்.

இதனால் கொளத்தூர் மணிக்கு ஜாமீன் வழங்க கர்நாடக அரசு எதிர்த்தது. இதைத் தொடர்ந்து சிறையிலேயேஇருந்து வந்தார் மணி. இந் நிலையில் திருச்சி வழக்கு விசாரணைக்கு வந்ததால் அவர் தமிழகம் கொண்டுவரப்பட்டார்.

கடந்த 1994ம் ஆண்டு திருச்சி அருகே அம்மாப்பேட்டை என்ற இடத்தில் தஞ்சை-நாகை நெடுஞ்சாலையில்போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு காரை நிறுத்த முயன்றனர்.

அதில் கண்ணன் என்பவர் உள்ளிட்ட 3 விடுதலைப் புலிகள் இருந்தனர். அவர்கள் போலீஸார் மீது வெடிகுண்டுவீசித் தாக்குதல் நடத்தினர். இதில் இளங்கோ என்ற காவலர் இறந்தார். இன்ஸ்பெக்டர் கனகராஜ் உள்ளிட்டசிலருக்குக் காயம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அப்போது தலைமறைவாகஇருந்த கண்ணன் சென்னையில் போலீஸாரால் சுற்றி வளைக்கப்பட்டபோது, சயனைடு விஷம் அருந்தி தற்கொலைசெய்து கொண்டார்.

இந்த வழக்கில் விடுதலைப் புலி கண்ணனுக்கு கார் வழங்கியது மற்றும் வெடிகுண்டுகள் தயாரிக்க உதவும் மூலப்பொருட்களை வழங்கியது தொடர்பாக கொளத்தூர் மணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று திருச்சி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த நீதிமன்றத்தில் கர்நாடகசிறையிலிருந்து அழைத்து வரப்பட்ட கொளத்தூர் மணி ஆஜர் செய்யப்பட்டார்.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி ஜெயபால், அதுவரைகொளத்தூர் மணியை திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து கொளத்தூர் மணி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+