அமெரிக்காவுக்கு எதிராக பின் லேடன் மீண்டும் கடிதம்

Subscribe to Oneindia Tamil

கெய்ரோ:

ஈராக் மீது தாக்குதல் நடத்த உள்ள அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளுக்கு எதிராக ஒன்று திரளுமாறு அரபு நாடுகளுக்கு ஒசாமா பின் லேடன்அழைப்பு விடுத்துள்ளார்.

தலைமறைவாகவே வாழ்ந்து வரும் ஒசாமா அவ்வப்போது நமது வீரப்பன் ஸ்டைலில் ஆடியோ, வீடியோ கேசட்டுகளை அனுப்பிவருகிறார்.

இப்போது லண்டனைச் சேர்ந்த அரேபிய செய்தித்தாளான அஷ்ஹர்- அல்- அவ்ஷத்துக்கு ஒசாமா 26 பக்கக் கடிதம் ஒன்றைஅனுப்பியுள்ளார். பின் லேடன் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள அந்தக் கடிதம் லண்டனில் உள்ள ஒரு இஸ்லாமிய அமைப்பிடம் இருந்துஇந்த அரபிப் பத்திரிக்கைக்கு வந்து சேர்ந்தது.

இந்த அமைப்புக்கும் பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிக் ரிசர்ச் சென்டருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. இந்த இஸ்லாமிக் ரிசர்ச்சென்டர் பின் லேடனின் அல்-கொய்தாவுக்கு நெருக்கமானது.

முகம்மத்- இல் ஷபாயி என்ற நிருபரிடம் வந்து சேர்ந்த கடிதத்தை அஷ்ஹர்- அல்- அவ்ஷத் பத்திரிக்கை பிரசுரித்துள்ளது. அந்தக் கடிதத்தின்சுருக்கம்:

இஸ்லாமிய நாடுகள் ஒருவருடன் ஒருவர் மோதுவதை உடனே நிறுத்த வேண்டும். அமெரிக்கா- பிரிட்டன், இஸ்ரேலிய சதிப் படையைஒழித்துக் கட்ட அரேபிய நாடுகள் ஒன்று சேர வேண்டும்.

மத்தியக் கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகள் மட்டும் இந்த சதிக் கூட்டணியின் இலக்கு அல்ல. உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம்களுக்கும்எதிரான போர் தொடுக்க இக் கூட்டணி திட்டமிட்டு வருகிறது.

முஸ்லீம்கள் தங்களது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து முதலில் விழித்தெழ வேண்டும். ஒருவரை ஒருவர் மோதிக் கொள்வதை நிறுத்தி எதிரியைநோக்கி ஆயுதங்களைச் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அஷ்ஹர்- அல்- அவ்ஷத் பத்திரிக்கை சவுதி அரேபிய அரசுக்குச் சொந்தமானது. ஆனால், தங்களை சுதந்திரமான பத்திரிக்கை என இதுகூறிக் கொள்கிறது.

ஈராக் மீதான தாக்குதலை பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் எதிர்த்து வரும் நிலையில் இந்தக் கடிதத்தை சவுதி அரசுக்குச் சொந்தமானபத்திரிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஈராக் மீதான தாக்குதலுக்கு சவுதியின் ராணுவப் படைத் தளங்களை அமெரிக்கா பயன்படுத்த உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+