பக்தர்கள் "சிறைபட்டனரா?": பழனி கோவில் நிர்வாகம் மறுப்பு
பழனி:
பழனி முருகன் கோவிலில் காற்று கூட புக முடியாத அறைக்குள் பக்தர்கள் அடைக்கப்பட்டதாக வந்த செய்திகளைகோவில் நிர்வாகம் மறுத்துள்ளது.
பழனியில் தைப்பூசத் திருவிழா நடந்தபோது 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காற்று கூட புக முடியாத அறைக்குள்அடைக்கப்பட்டதாகவும், கோவில் இணை ஆணையர் தவறுதலாக அவர்களை அறைக்குள் வைத்துப் பூட்டி விட்டுச்சென்றதாகவும் செய்திகள் வெளியாயின.
இந்நிலையில் இச்செய்தியை கோவில் இணை ஆணையரான கே.கே. ராஜா மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆன்மீகத்திற்கு எதிராக அவதூறைக் கிளப்பும் வகையில் இந்த தவறான செய்தி பரப்பப்பட்டுள்ளது.
எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. 25லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பழனிக்கு வந்திருந்து முருகனை தரிசித்தனர்.
பக்தர்களுக்கு எந்தவித குறையும் இல்லாமல் அனைத்து வசதிகளும் சிறப்புற செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில் ஆன்மீகவாதிகள் மத்தியில் அவதூறான செய்தியைப் பரப்பும் விதத்தில் இந்தத் தவறான வதந்திகிளப்பப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் ராஜா.
5,000 பக்தர்கள் கோவிலின் பாதாள அறையில் இருந்ததைப் பார்க்காமல் அந்த அறையின் பிரம்மாண்டக்கதவுகளை கோவிலின் துணை ஆணையர் மூடிவிட்டுச் சென்றதால் அவர்கள் பெரும் துயரத்துக்கு உள்ளாகினர்.மறு நாள் அதிகாலை கோவில் அதிகாரி வந்து தான் அவர்களை விடுவித்தார்.
இந்தச் செய்தியை பழனி கோவில் நிர்வாகம் இப்போது மறுக்கிறது.
-->












Click it and Unblock the Notifications