பட்டு விலையில் வீழ்ச்சி: உதவ முன் வந்தது அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பட்டு உற்பத்தியாளர்களுக்கு உதவும் வகையில் ரூ. 37.50 லட்சத்தை ஒதுக்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

பட்டுக் கூட்டின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் பட்டு உற்பத்தி செய்யும் விவசாயிகள் பெரும் கவலையில்ஆழ்ந்துள்ளனர்.

ஏற்கனவே வறட்சியால் சாகுபடி இல்லாமல் தவித்து வரும் விவசாயிகளுக்கு அடுத்த அடி ஏற்பட்டுள்ளது. பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இப்போது அடுத்து என்ன நடக்குமோ என்ற கவலையில் உள்ளனர்.

சீனா போன்ற நாடுகளில் இருந்து குறைந்த விலையில் பட்டு இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டில் தயாராகும்பட்டுப் புழுக் கூட்டின் விலையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதனால், இதனை வளர்த்து வந்த விவசாயிகளின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவும் வகையில் பட்டுப் புழுக் கூட்டுக்கு ரூ. 10 ஆதரவுவிலையாக அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இதற்கு சமமான தொகையை மத்திய பட்டு வாரியமும்வழங்கும். எனவே ஒரு கிலோ பட்டுப் புழுக் கூட்டுக்கு 20 ரூபாயவது விவசாயிகளுக்கு கிடைக்கும்.

இந்த விவசாயிகளுக்கு உதவ ரூ. 37.50 லட்சம் நிதியை ஒதுக்கவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+