டெல்லியில் தமிழக பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 7 மாதங்களாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு பின்னர் அவரை ஒரு அப்பாவிதமிழ் இளைஞருக்குத் திருமணம் செய்து வைத்த டி.எஸ்.பி. கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தோ- திபேத்திய எல்லைப் பாதுகாப்புப் போலீஸ் படையில் (ITBP) டி.எஸ்.பியாக இருப்பவர் ரமேஷ் பால். இவர் இந்தப் படையில்இருந்தபடியே டெபுடேசன் அடிப்படையில் மத்திய அரசுக்குச் சொந்தமான விஸ்வகர்மா கார்பரேசனில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிறுவனம் டெல்லியில் உள்ளது. டெல்லியைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான பொம்மி என்பவரின் வீட்டில் தான் பேயிங்-கெஸ்டாகஇவர் தங்கி இருந்தார். பொம்மியின் வீட்டில் வீட்டு வேலைக்காக தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் (பெயர், அடையாளம்தவிர்க்கப்பட்டுள்ளது) சேர்க்கப்பட்டார்.

இந்த வேலைக்காரப் பெண்ணை டி.எஸ்.பி. ரமேஷ் பால் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். தமிழகத்தில் இருந்துபிழைப்புக்காகச் சென்றதால் அதைத் தாங்கிக் கொண்டு அந்தப் பெண் தொடர்ந்து வேலை பார்த்து வந்தார்.

இந்த விவகாரம் தெரிந்திருந்தும் கூட ரமேஷ் பாலை பொம்மி கண்டிக்கவில்லை என்று தெரிகிறது. கிட்டத்தட்ட 7 மாதங்கள் அந்தமிருகத்தால் தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்ட அந்தப் பெண்ணை கடைசியாக டெல்லியில் கரோல் பார்க்கில் வசிக்கும் பாபு என்றதமிழக வாலிபருக்குத் திருமணம் செய்து வைக்க ராம்பால் திட்டமிட்டார்.

கன்னாட்பேலஸ் பகுதியில் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வரும் பாபுவுக்கும் அந்தப் பெண்ணுக்கும் கடந்த ஆண்டு அக்டோபரில்திருமணம் நடந்தது.

திருமணமானவுடனே தனது மனைவி கருவுற்றிருப்பதை பாபு அறிந்தார். இதையடுத்து தனது மனைவியிடம் பாபு விசாரித்தபோது தான்ரமேஷ் பாலால் தொடர்ந்து தான் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானதையும் தனது இயலாமையையும் சொல்லி கதறினார் அந்தப் பெண்.

இதையடுத்து காவல் நிலையத்தில் பாபு புகார் செய்தார். ஆனாலும் ரமேஷ் பால் மத்தியப் படையின் டி.எஸ்.பி. என்பதால் டெல்லிபோலீசார் உடனே அவரைக் கைது செய்யாமல் இழுத்தடித்தனர். இந் நிலையில் அவரைக் கைது செய்ய இந்தோ-திபேத் போலீஸ் படைஉத்தரவிட்டது.

தன் மீது வழக்குப் பதிவானதை அறிந்த ரமேஷ் பால் டெல்லிய்ல் இருந்து தப்ப முயன்றார். ஆனால், அவரை ரயில் நிலையத்திலேயேவைத்து டெல்லி போலீசார் கைது செய்தனர்.

அந்த இளம் பெண்ணை கடந்த ஆண்டு பிப்ரவரியில் இருந்து அக்டோபர் வரை தொடர்ந்து 7 மாதங்கள் பாலியல் பலாத்காரம் செய்ததைரமேஷ பால் ஒப்புக் கொண்டுள்ளார்.

இந் நிலையில் தான் ஏமாற்றப்பட்டிருந்தாலும் தனது மனைவிக்கு முழுத் துணையாக இருக்க பாபு முன் வந்துள்ளார் என போலீசார்தெரிவித்தனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+