போலீஸ் தேடும் தீவிரவாதிகள் அபு-ஹம்சா, அபு-உமர்: படங்கள் வெளியீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகம் உள்பட நாட்டின் பல பகுதிகளிலும் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட அபு-ஹம்சா, அபு-உமர் ஆகியோர் சவுதிஅரேபியாவில் பதுங்கி இருப்பதை மத்திய, மாநில உளவுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

Abu Hamsa Abu Umar
அபு-ஹம்சா அபு-உமர்

இந்த இரு தீவரவாதிகளின் படங்களையும் தமிழக போலீசார் வெளியிட்டுள்ளனர். இவர்களைக் கைது செய்து இந்தியா கொண்டு வரும்முயற்சிகளில் சி.பி.ஐயுடன் சேர்ந்து தமிழக போலீசாரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர்-6ம் தேதியன்று தமிழகத்தில் மிக பயங்கரத் தாக்குதல் நடத்த திட்டமிட்டப்பட்டதை மத்தியஉளவுப் பிரிவினர் சரியான நேரத்தில் கண்டுபிடித்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

மத்திய அரசு கொடுத்த தகவல்களை வைத்து மாநில போலீசார் நடத்திய மிகப் பெரிய தேடுதல் வேட்டையில் மாநிலம் முழுவதும் 26 பேர்கைது செய்யப்பட்டனர். முஸ்லீம் பாதுகாப்புப் படை என்ற புதிய அமைப்பை உருவாக்கி இவர்கள் செயல்பட்டதும் தெரியவந்தது.

காயல்பட்டிணம், அதிராமபட்டிணம், சென்னை, தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சி, மதுரை என பல நகர்களிலும் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். சுமார் 8 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்தும் டெட்டோனேட்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆனால், இந்தத் தாக்குதல் திட்டத்துக்கான மூளைகளான அபு-ஹம்சா, அபு- உமர் ஆகியோர் சவுதி அரேபியாவில் இருப்பது தெரியவந்தது.இதில் அபு-ஹம்சா ஹைதராபாத்தைச் சேர்ந்தவன். அபு-உர் பாகிஸ்தானைச் சேர்ந்தவன்.

Imran
இம்ரான்
தளபதி இம்ரான் என்பவன் மூலம் தான் தங்களது வெடிகுண்டுத் தாக்குதலை நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்தனர். இந்த இம்ரான்தமிழகத்தைச் சேர்ந்தவன். இம்ரானும் சவுதியில் தான் பதுங்கியிருக்கிறார்.

இந்த முக்கியமான 3 பேரின் புகைப்படங்களும் இல்லாததால் இவர்கள் குறித்து இன்டர்போலுக்கு முழுத் தகவல் தர முடியாமல் தமிழககாவல்துறை திணறி வந்தது. இப்போது இம்ரானின் படம் கிடைத்துவிட்டது.

ஆனால், அபு-உமர், அபு-ஹம்சா ஆகியோரின் படங்கள் கம்ப்யூட்டர் மூலம் தடயவியல் போலீசார் உருவாக்கியுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவல்களை வைத்து இவர்களது உருவங்கள் வரையப்பட்டுள்ளன.

இந்தப் படங்கள் சி.பி.ஐ. மூலமாக இன்டர்போலிடம் வழங்கப்படும். இதைத் தொடர்ந்து இவர்களது கைது நடவடிக்கை துரிதமாகும் என்றுதெரிகிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+