கள்ளக் காதல்: பெண்ணை அடித்துக் கொன்ற பெண்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கள்ளக்காதலில் ஈடுபட்டதாகக் கூறி ஒரு பெண்ணை நான்கு பெண்கள் சேர்ந்து அடித்துக் கொன்றுள்ளனர்.

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஷபானா. 24 வயதாகும் இவருக்கு கணவர், ஒரு மகள் உள்ளனர். இந் நிலையில்ஷபானாவுக்கும் அப்துல் ஹமீது என்பவருக்கும் இடையே சிலமாதங்களுக்கு முன் தவறானதொடர்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இது அப்துல் ஹமீதுவின் தாயாருக்கு தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஷபானாவை அவர் கண்டித்துள்ளார். தனது மகனையும் அவர்கண்டித்துள்ளார். ஆனால், தொடர்ந்து இருவரும் தொடர்பு வைத்துள்ளனர்.

இந் நிலையில் ஹமீதுவின் தாயார் பீவி, அவரது மகள் ஹசீனா மற்றும் ரிஸ்னம், மெகபூப் பீவிஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு ஷபானாவின் வீட்டுக்குச் சென்றனர். சிறிது நேரம் கழித்து அவர்கள் அந்த வீட்டிலிருந்து வெளியேசென்றுவிட்டனர்.

இதையடுத்த சிறிது நேரத்தில் ஷபானாவின் கணவர் வஸீர் வீட்டுக்குள் சென்றார். அப்போது தனது மனைவி ஷபானா ரத்தக் காயங்களுடன்கிடந்ததைப் பார்த்து அதிர்ந்தார். உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால் ஷபானா இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

தனது வீட்டுக்கு ஹமீதுவின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்கள் வந்து போனதாகவும், அதற்குப் பின்னரே ஷபானா இறந்து விட்டதாகவும் வஸீர் போலீஸில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அந்த நான்கு பெண்களிடம் போலீஸார்விசாரணை நடத்தி வருகின்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+