காங்கிரஸ் நடத்திய கோஷ்டிப் போராட்டம்
சென்னை:
மத்திய, மாநல அரசுகளைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று 54 இடங்களில்போராட்டங்கள் நடந்தன. ஆனாலும் காங்கிரஸ் கட்சியின் கோஷ்டிப் பூசல்தான் இந்த போராட்டத்தில் "பளிச்"எனத் தென்பட்டது.
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்குகளைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று போராட்டம்நடத்தப் போவதாக காங்கிரஸ் அறிவித்திருந்தது.
அதன்படி இன்று காலை மாநிலம் முழுவதும் 54 இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
சென்னையில் மூன்று இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். முன்னாள் தமாகவினர்அனைவரும் காங்கிரஸ் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்எதிரே போராட்டம் நடத்தினர்.
"ஒரிஜினல்" காங்கிரஸ் கட்சியினரோ குமரி அனந்தன் தலைமையில் வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டம்செய்தனர். இன்னொரு பிரிவினர் மெமோரியல் ஹால் முன்பு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தின் முடிவில் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குச் சென்று சோ.பா. கோரிக்கை மனுஒன்றைக் கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி உருப்படியான வளர்ச்சித் திட்டங்கள் எதுவும்செயல்படுத்தப்படவில்லை.
காவிரி விவகாரத்தில் பக்குவமில்லாத அணுகுமுறையை முதல்வர் ஜெயலலிதா கடைப்பிடித்ததால்தான் தற்போதுதமிழக விவசாயிகளுக்கு பசி, பட்டினி, தற்கொலை, சாவு போன்ற அவல நிலைகள் ஏற்பட்டுள்ளன.
மக்கள் விரோதப் போக்குகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுதொடர்பாக இரு அரசுகளுக்கும் கடிதம் எழுதுவோம்.
அப்படியும் அவை தங்களை மாற்கிக் கொள்ளவில்லையென்றால் எங்கள் போராட்டத்தை மேலும்தீவிரப்படுத்துவோம் என்றார் சோ.பா.
இதேபோல, மற்ற மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பும் போராட்டங்கள் நடந்தன. திருச்சியில் அம்மாநகரமேயர் சாருபாலா தொண்டைமான் தலைமையில் போராட்டம் நடந்தது.
காவிரி டெல்டா பகுதிகளில் பட்டினிச் சாவுகளை தடுத்து நிறுத்தத் தவறியது, விவசாயிகளுக்கு உரிய நவாரணம்வழங்கத் தவறியது உள்ளிட்ட மாநில அரசின் போக்கைக் கண்டித்தும், மத்திய அரசின் போக்கைக் கண்டித்தும்இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன.
போராட்டங்களின் இறுதியில், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டன.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications