காங்கிரசுக்கு திமுக ஆதரவு அளிக்க இளங்கோவன் வேண்டுகோள்
சேலம்:
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் தங்கள் கட்சிக்குத் திமுக ஆதரவளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் செயல்தலைவரான இளங்கோவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக கருணாநிதியைச் சந்திக்கவும் தயாராகஇருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
சாத்தான்குளம் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக திமுக தலைவர் கருணாநிதி நேற்று அறிவித்தார். பா.ஜ.கவுக்குமறைமுகமாகத் தன் ஆதரவைத் தெரிவிப்பதற்காகவே திமுக இவ்வாறு அறிவித்துள்ளது என பரவலாகக்கருதப்படுகிறது.
இந்நிலையில் இந்த இடைத் தேர்தலில் காங்கிரசுக்கு திமுக ஆதரவளிக்க வேண்டும் என்று இளங்கோவன்கோரியுள்ளார். சேலத்தில் இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
சாத்தான்குளம் இடைத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக திமுக அறிவித்து விட்டது. எனவே திமுகவின்ஓட்டுக்கள் சிதறி விடாத வகையில், அக்கட்சி எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
இதன்மூலம் மக்கள் விரோத அதிமுக அரசுக்குப் பாடம் புகட்ட நினைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கை கொடுக்கவேண்டும். இது தொடர்பாக தேவைப்பட்டால் நான் கருணாநிதியைச் சந்தித்துப் பேசுவதற்கும் தயாராகவேஉள்ளேன்.
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் எங்களை ஆதரிக்க வேண்டும் என்று கோரி கம்யூனிஸ்ட், விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்குக் கடிதங்கள் எழுதியுள்ளோம் என்றார் இளங்கோவன்.
இளங்கோவன் ஆரம்பத்தில் இருந்தே திமுகவுடன் கூட்டணிக்காக முயன்று வருகிறார். ஆனால், சோ.பாலகிருஷ்ணன் போன்றவர்கள் திமுகவுடன் கூட்டணியை ஆதரிக்கவில்லை. இளங்கோவன் தவிர மற்ற காங்கிரஸ்தலைவர்களின் போக்கு திமுகவுக்கும் பிடிக்கவில்லை.
சோனியா- மாறன் மட்டத்தில் சில சுற்றுப் பேச்சுவார்த்தைகள் டெல்லியில் நடந்தன. மாறன் உடல் நிலைபாதிக்கப்பட்டதால் அந்தப் பேச்சுக்கள் தொடரவில்லை. இந் நிலையில் வாஜ்பாயின் நேரடித் தலையீட்டால் மாநிலபா.ஜ.க. தலைகள் அடக்கப்பட்டுள்ளன. இதனால் திமுகவும் காங்கிரசுடன் கூட்டு சேர இப்போதைக்குவிரும்பவில்லை.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications