பயிர் கருகிய சோகத்தில் மேலும் 3 விவசாயிகள் சாவு
நாகப்பட்டனம் & விழுப்புரம்:
நீரின்றி வாடிய பயிரைப் பார்த்து மனம் நொந்து போன விவசாயி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். மற்றொரு விவசாயி கரும்புப் பயிர் கருகியதால் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார். மன்னார்குடியில் ஒருவிவசாயி உயிரிழந்துள்ளார்.
நாகப்பட்டிணத்தில்...
நாகப்பட்டனம் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் உள்ள அம்மனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கணேசன்.31 வயதான இவரது வயலில் தண்ணீரின்றி பயிர்கள் வாடிவிட்டன. பாளம், பாளமாக வெடித்துக் கிடக்கும்வயலைப் பார்த்து கண்ணீர் வடித்தார் கணேசன்.
பின்னர் சிக்கல் என்ற ஊரின் அருகே ஓடிக் கொண்டிருந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அவர் ஏற்கனவே வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டுத்தான்சென்றுள்ளார்.
கீழ்வேளூர் ரயில்வே கேட் அருகே அடையாளம் தெரியாத ஒருவர் இறந்து கிடப்பதாக கணேசனின்குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்தது. அவர்கள் ஓடிச் சென்று விசாரிப்பதற்குள், போலீசார் அந்தப் பிணத்தைப்புதைத்து விட்டனர்.
புகைப்படம் மற்றும் உடைகளைப் பார்த்த பின்னர்தான் இறந்தது கணேசன் என்று அவர்களுடையகுடும்பத்தினருக்குத் தெரிய வந்தது.
விழுப்புரத்தில்...
இதற்கிடையே விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி தன்னுடைய கரும்புப் பயிர் கருகியதால் அந்தஅதிர்ச்சியிலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
ரிஷிவந்தியம் ஒன்றியம் சித்தேரிப்பட்டைச் சேர்ந்த சொர்ணபுஷ்பம் என்ற 60 வயது விவசாயி தன்னுடையநிலத்தில் 1.5 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிட்டிருந்தார்.
இந்தப் பயிருக்காக அவர் இந்தியன் வங்கியிலிருந்து ரூ.15 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். ஆனால் வறட்சிகாரணமாக அவர் வயலில் உள்ள கிணற்றில் தண்ணீர் முழுவதுமாக வற்றி விட்டது.
இதனால் பயிரிடப்பட்டுள்ள கரும்புப் பயிர்கள் அனைத்தும் வாடத் தொடங்கின. கருகிக் கொண்டிருக்கும் கரும்புப்பயிர்களைப் பார்த்த சொர்ணபுஷ்பம் மிகவும் மன வேதனை அடைந்தார்.
கரும்பு முற்றிலுமாகக் கருகுவதற்குள் அதை வெட்டுவதற்கு (அறுவடை செய்வதற்கு) உத்தரவிட வேண்டும் என்றுகள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார். ஆனால் உத்தரவுகிடைக்கவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் வயலுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த சொர்ணபுஷ்பம் மாரடைப்பால் இறந்தார்.
மன்னார்குடியில்...
இதற்கிடையே மன்னார்குடி அருகே உள்ள ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்த சம்பந்தம் என்ற 57 வயது விவசாயி பயிர்கள் கருகியசோகத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பா நெல் பயிரிட்டிருந்த சம்பந்தம் தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகளையும் செய்து வந்தார். இந் நிலையில் நீர் இல்லாமல்இவரது வயலில் பயிர்கள் வாடியதால் வீட்டில் வந்து அழுதவண்ணம் இருந்தார். இந்த விளைச்சலை வைத்து மகளின்திருமணத்தை நடத்திவிடலாம் என்று திட்டமிட் பெருமளவில் கடன் வாங்கி பயிருக்காக செலவிட்டிருந்தார்.
ஆனால், அந்தப் பயிர் கருகியதால் மனமுடைந்த சம்பந்தம் நேற்று இரவு வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தற்கொலை மற்றும் மரணங்கள் தொடர்கதையாகிவிட்டன.இதுவரை 8 பேர் இறந்துள்ளனர். விவசாயிகள் வீரையன், சண்முகம் மற்றும் கணேசன் ஆகியோர் தற்கொலைசெய்து கொண்டுள்ளனர். பத்மாவதி, வேலுச்சாமி, தமிழரசன், சொர்ணபுஷ்பம், சம்பந்தம் ஆகியோர் பயிர் கருகியஅதிர்ச்சியில் உயிரிழந்துள்ளனர்.
இது தவிர பட்டினியால் ஒரு விவசாயியின் மகன் உயிரிழந்துள்ளான். இவனது பட்டினிச் சாவில் தான் இந்தமரணங்கள் தொடங்கின. இப்போது அவை தொடர் கதையாகிவிட்டது மனதைப் பிசைகிறது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications