பரோலில் வெளியே வந்த அல்-உம்மா பாட்சா
கோயம்புத்தூர்:
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான அல்-உம்மா பாட்சா 7 மணி நேரம் சிறையில் இருந்து வெளியேபரோலில் விடப்பட்டார்.
கிட்டத்தட்ட கடந்த 5 ஆண்டுகளாக அவர் சிறையில் இருந்து வருகிறார். வழக்கு விசாரணை நடந்து கொண்டுள்ளது.
இந் நிலையில் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ள தனது தாயாரைக் காண அனுமதிக்க வேண்டும் என பாட்சா கோரிக்கைவைத்தார்.
இதையடுத்து மிக பலத்த ஆயுத போலீசார் பாதுகாப்புடன் பாட்சா கோவை மத்திய சிறையில் இருந்து இன்று காலை 10 மணிக்குவெளியே அழைத்து வரப்பட்டார். தனது வீடு உள்ள கோட்டை மேட்டுக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
இதனால் கோட்டைமேட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கும் ஆயுதப் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
பின்னர் மாலை 5 மணிக்கு அவர் மீண்டும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை சிறையில் அடைத்துவிட்டுத் தான்போலீசார் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர்.
-->












Click it and Unblock the Notifications