திமுக ஆதரவு விவகாரம்: இளங்கோவன்- சோ.பா. மோதல் முற்றுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சாத்தான்குளம் இடைத் தேர்தலில் திமுக ஆதரவைக் கோருவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணனுக்கும் செயல்தலைவர் இளங்கோவனுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்துள்ளது.

இதையடுத்து இன்று கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் சோ.பாலகிருஷ்ணனுடன் சேர்ந்து தான் நடத்த இருந்தபத்திரிக்கையாளர் சந்திப்பை இளங்கோவன் புறக்கணித்தார்.

சாத்தான்குளத்தில் திமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட வேண்டும் என இளங்கோவன் கூறி வந்தார். ஆனால், இதற்கு மற்றகாங்கிரஸ் தலைவர்களிடம் இருந்து ஆதரவு கிடைக்கவில்லை.

இந் நிலையில் அங்கு திமுக போட்டியிடாது என்று அறிவித்தது.

இதனால் தங்களுக்கு திமுக ஆதரவளிக்க வேண்டும் என இளங்கோவன் கோரி வருகிறார். ஆனால், சோ. பாலகிருஷ்ணனோ, திமுக ஆதரவுதந்தால் அதை ஏற்பது குறித்து யோசிப்போம் என்று பேசி திமுக தலைவர் கருணாநிதியை எரிச்சல்படுத்தினார்.

இதனால், சோ. பாலகிருஷ்ணனைக் கண்டித்து கருணாநிதி அறிக்கை வெளியிட்டார். ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் சமூகத்தைச்சேர்ந்தவர் சோ.பாலகிருஷ்ணன். இதனால் அவரை அதிமுக வளைத்துவிட்டதாக திமுக கருதுகிறது. இதனால் காங்கிரசுக்கு மறைமுகஆதரவு தர கருணாநிதி தயாராக இருந்தாலும் சோ.பா. மீது கடுப்பில் இருக்கிறார்.

இந் நிலையில் நேற்றும் கூட திமுகவின் ஆதரவை இளங்கோவன் கோரினார். கருணாநிதி அனுமதித்தால் அவரை நேரில் சந்தித்துப் பேசக்கூடத் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார்.

இதற்கிடையே இன்று சத்தியமூர்த்தி பவனில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சோ.பாவும்இளங்கோவனும் பேசுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இன்று சென்னையில் இருந்து கொண்டே இந்த பத்திரிக்கையாளர் கூட்டத்தை இளங்கோவன் புறக்கணித்தார். திமுக ஆதரவைக்கேட்பதில் சோ.பாவுடன் மோதலில் இருக்கும் இளங்கோவன் இன்று அவருடன் சேர்ந்து உட்கார்ந்து சாத்தான்குளம் தேர்தல் குறித்துபத்திரிக்கையாளர்களுடன் பேச விரும்பவில்லை என்று தெரிகிறது.

இந் நிலையில் இன்று சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியத்துடன் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த சோ.பா.மறைமுகமாக இளங்கோவனைத் தாக்கினார்.

அவர் கூறியதாவது:

கூட்டணி குறித்து தனி நபர்கள் (இளங்கோவன்) யாரும் முடிவு செய்ய முடியாது. கட்சியின் நிர்வாகிகள் குழு, செயற்குழு, தமிழ்நாடுகாங்கிரஸ் கமிட்டியின் அரசியல் நிர்வாகக் குழு ஆகியவற்றில் விவாதம் நடத்தித் தான் முடிவெடுக்க முடியும்.

சாத்தான்குளத்தில் பா.ஜ.க. தவிர்த்த பிற கட்சிகளின் ஆதரவைக் கோருவது குறித்து விரைவில் தீவிர ஆலோசனை நடத்தப்படும். அதன்பின்னர் அனைத்துக் கட்சித் தலைவர்களைச் சந்திப்பது குறித்தும் யோசிக்கப்படும்.

சாத்தான்குளத்தில் அதிமுக முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது. இதனால் அங்கு தேர்தலைக் கண்காணிக்க முன்னாள் உயர் நீதிமன்றநீதிபதிகள், முன்னாள் போலீஸ் அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள், தன்னார்வ அமைப்புகள், எழுத்தாளர்களைக் கொண்ட கண்காணிப்புக்குழு அமைக்கப்பட வேண்டும்.

இக் குழு தேர்தல் நடவடிக்கைகளையும் வாக்குப் பதிவையும் கண்காணிக்க வேண்டும் என்றார் சோ.பா.

தேர்தல் பணிகள் தீவிரம்:

இந் நிலையில் சாத்தான்குளத்தில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அங்கு ஓட்டுப் பதிவுக்காக பயன்படுத்தத் தேவையானமின்னணு எந்திரங்கள் தேனி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டன.

இவை ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா போட்டியிட்டபோது பயன்படுத்தப்பட்டவை என்பது கொசுறு செய்தி.

கேரள தேர்தல் அதிகாரிகள் மேற்பார்வையில் இவை அனுப்பப்பட்டன. சாத்தான்குளத்தில் 450 மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள்பயன்படுத்தப்பட உள்ளன.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+