கேள்வித் தாள் வெளியானதால் ரத்தான பி.ஈ. தேர்வு இன்று நடக்கிறது
சென்னை:
வினாத் தாள் அவுட் ஆனதால் நிறுத்தி வைக்கப்பட்ட பி.ஈ, பி.டெக் மாணவர்களுக்கான என்ஜினியரிங் மெக்கானிஸ் தேர்வு இன்றுநடக்கிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் இப்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.இதனால் பாடத் திட்டத்தையும் தேர்வுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் தான் நிர்ணயிக்கிறது.
கடந்த மாதம் அனைத்துக் கல்லூரிகளின் பி.ஈ., பி.டெக் மாணவர்களுக்கு மூன்றாவது செமஸ்டர் தேர்வுகளை பல்கலைக்கழகம் நடத்தியது.அப்போது என்ஜினியரிங் மெக்கானிக்ஸ் தேர்வுத் தாள் தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் வெளியானது.
தென் மாவட்டத்தில் ஒரு பகுதியில் வெளியான இக் கேள்வித் தாள்கள் பேக்ஸ் மூலம் மாநிலத்தின் பிற கல்லூரி மாணவர்களுக்கும் பறந்தது.இது குறித்து தகவல் கிடைத்ததும் கடைசி நேரத்தில் தேர்வை ஒத்தி வைத்தது.
அந்தத் தேர்வு இன்று நடக்கிறது. வினாத் தாள் அவுட் ஆகிவிடாமல் தடுக்க சில நடவடிக்கைகளையும் பல்கலைக்கழகம் எடுத்துள்ளது.
-->












Click it and Unblock the Notifications