அறுந்து கிடந்த மின் வயரில் கால் வைத்த விவசாயி பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அருகே ஒரு விவசாயி அறுந்து கிடந்த மின்சார வயரில் காலை வைத்தால் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

தாம்பரத்தை அடுத்த சேலையூரைச் சேர்ந்தவர் விவசாயி முருகேசன். இவர் நேற்று இரவு தனது வயலுக்குள் சென்றார். அப்போது உயர்அழுத்த மின்சார வயர் துண்டிக்கப்பட்டு தரையில் கிடந்தது.

இருட்டில் மின் வயர் மீது தெரியாமல் காலை வைத்த முருகேசன் அடுத்த நிமிடமே உயிரிழந்தார். நெடுநேரமாகியும் வீடு திரும்பாதஅவரைத் தேடி குடும்பத்தினர் வயலுக்குள் சென்றபோது தான் அவரது பிணமாகிக் கிடந்தது தெரியவந்தது.

இவரது வயல் வழியாகச் செலலும் மின்சார வயர் எப்படி அறுந்தது என்று தெரியவில்லை. சேலையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துவிசாரித்து வருகின்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+