லாட்டரி தடைக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

லாட்டரிச் சீட்டு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.

லாட்டரித் தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நேற்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தலைமைநீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி மலை சுப்பிரமணியம் ஆகியோர் இவ்வழக்கை விசாரித்தனர்.

தங்கள் லாட்டரிச் சீட்டுக்களை விற்பதற்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று மிசோரம்லாட்டரி சார்பில் சமீபத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதுவும் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்குகளைவிசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தனர்.

ஆனால் இன்று மீண்டும் உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு தொடர்பான இறுதிக் கட்ட விசாரணை நடைபெற்றது.

விசாரணைகளின் முடிவில், நாளை அல்லது நாளை மறுநாள் இவ்வழக்கு மீதான தீர்ப்பு வழங்கப்படும் என்றுநீதிபதிகள் அறிவித்தனர்.

இதற்கிடையே லாட்டரிச் சீட்டுக்களை விற்பதற்கு உயர் நீதிமன்றம் விதித்திருந்த ஒரு வார காலக் கெடுமுடிவடைந்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நேற்று முதல் மீண்டும் லாட்டரிக் கடைகள் மூடப்பட்டன.

இந்நிலையில் லாட்டரிச் சீட்டுக்களுக்கு விதிக்கப்பட்ட ஒட்டுமொத்தத் தடையை விலக்கக் கோரி அகில இந்தியலாட்டரிச் சீட்டு விற்பனையாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரே இந்த உண்ணாவிரதம் நடந்தது. போராட்டத்தின்முடிவில் இன்று மாலை முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து இது தொடர்பான கோரிக்கை மனு ஒன்றை அளிக்கப்போவதாக சம்மேளனத்தின் தலைவர் உஸ்மான் பயஸ் தெரிவித்தார்.

தங்கள் கோரிக்கைக்கு முதல்வர் செவி சாய்க்காவிட்டால் அடுத்தகட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள லாட்டரிவிற்பனையாளர்கள் மற்றும் ஏஜென்ட்டுகள் அனைவரும் பேரணிப் போராட்டம் ஒன்றை வரும் பிப்ரவரி 4ம் தேதிநடத்துவோம் என்றும் உஸ்மான் கூறினார்.

பாண்டிச்சேரியில் தடை:

இதற்கிடையே பாண்டிச்சேரியில் லாட்டரிச் சீட்டு விற்பனைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்று முதல் இது அமலுக்கு வருகிறது.

பாண்டிச்சேரி அரசு லாட்டரிச் சீட்டு எதுவும் நடத்தவில்லை. இதையடுத்து கடந்த 1998ம் ஆண்டே பிற மாநிலலாட்டரிச் சீட்டுக்களை விற்பனை செய்ய அம்மாநில அரசு தடை விதித்தது.

ஆனால் லாட்டரி ஏஜென்டுகள் இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அரசு உத்தரவுக்குஇடைக்காலத் தடை பெற்றனர். பின்னர் தொடர்ந்து லாட்டரிச் சீட்டுக்களை விற்று வந்தனர்.

இந்நிலையில் தங்கள் உத்தரவுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கிக் கொள்ளுமாறு உயர்நீதிமன்றத்தில் பாண்டிச்சேரி அரசு பதில் மனு தாக்கல் செய்தது.

இம்மனுவை நேற்று விசாரித்த நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி மலை சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கியபெஞ்ச், ஜனவரி 22ம் தேதி (இன்று) முதல் பாண்டிச்சேரி யூனியன் பிரதேச எல்லைக்குள் பிற மாநில லாட்டரிச்சீட்டுக்கள் விற்பனை செய்யப்படக் கூடாது என்று உத்தரவிட்டனர்.

மறு உத்தரவு வரும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என்றும் கூறிய நீதிபதிகள், நேற்று (ஜனவரி 21) வரைவிற்கப்பட்ட லாட்டரிச் சீட்டுகளுக்கு மட்டும் பரிசுக் குலுக்கல் நடத்தலாம் என்றும் தெரிவித்தனர்.

பின்னர் வரும் 29ம் தேதிக்கு இவ்வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+