நெடுமாறனின் ஜாமீன் மனு: விசாரிக்க நீதிபதிகள் விரும்பவில்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 5பேரின் ஜாமீன் மனுக்களை விசாரிக்க விரும்பவில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறிவிட்டனர்.

இந்த மனுக்களை வேறு நீதிபதிகளைக் கொண்டு விசாரித்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குஅவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாக நெடுமாறன் கடந்த ஆகஸ்டு 1ம் தேதி கைது செய்யப்பட்டார்.

மேலும் தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளரான சுப. வீரபாண்டியன், நிர்வாகிகளான பாவாணன்,தாயப்பன், பரந்தாமன் ஆகியோரும் தமிழக "க்யூ" பிரிவு போலீசாரால் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுசிறைகளில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இவர்கள் ஐந்து பேரும் ஜாமீன் கோரி சென்னை-பூந்தமல்லியில் உள்ள பொடா தனி நீதிமன்றத்தில்மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். ஆனால் அந்த மனுக்களை பொடா நீதிமன்ற நீதிபதி எல். ராஜேந்திரன்நிராகரித்தார்.

இதையடுத்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் உயர்நீதிமன்ற நீதிபதி என். தினகர் மற்றும் நீதிபதி ஆர். பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் இன்றுவிசாரணைக்கு வந்தன.

ஆனால் இந்த ஜாமீன் மனுக்களைத் தாங்கள் விசாரிக்க விரும்பவில்லை என்று இரு நீதிபதிகளும் கூறிவிட்டனர்.

மேலும் இந்த ஜாமீன் மனுக்களை வேறு நீதிபதிகளைக் கொண்டு விசாரிப்பதற்கு தலைமை நீதிபதி சுபாஷன்ரெட்டிக்கு சிபாரிசு செய்வதாகவும் அறிவித்தனர்.

குற்றப்பத்திரிக்கை தாக்கல்:

இந் நிலையில் நெடுமாறன், சுப. வீரபாண்டியன், பாவாணன், தாயப்பன் ஆகியோர் மீது க்யூ பிராஞ்ச் போலீசார்பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

468 பக்கங்களைக் கொண்ட இந்தக் குற்றப்பத்திரிக்கையில் 110 சாட்சியங்களும், 65 ஆதாரங்களும்சேர்க்கப்பட்டுள்ளன.

குற்றப் பத்திரிக்கையை பொடா நீதிமன்ற நீதிபதி ராஜேந்திரனிடம் "கியூ" பிரிவு போலீசார் வழங்கினர். கடந்ததிங்கள்கிழமை இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இன்று தான் இந்த விவரம்வெளியில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 180 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இந்தக் கெடு வரும் 27ம்தேதி முடிவடைய உள்ள நிலையில் இது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் மீது புலிகளை ஆதரித்துப் பேசியதாக பொடா சட்டத்தின் 21(2), 21(3) ஆகிய பிரிவுகளில் வழக்குகள்பதிவு செய்யப்பட்டன.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+