கந்து வட்டியில் கொடி கட்டிப் பறக்கும் தமிழக போலீசார்: உளவுப் பிரிவு ரகசிய சர்வே
சென்னை:
தமிழகத்தில் போலீசார் தங்களது லஞ்சப் பணத்தில் கந்து வட்டித் தொழில் நடத்தி வருவது அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக ரகசியஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில உளவுத்துறைக்கு அரசு உத்தகவிட்டுள்ளது.
தமிழக போலீசாரின் சட்டவிரோத செயல்கள் குறித்து மத்திய உளவுப் பிரிவும் ஏற்கனவே பலமுறை மாநில அரசுக்கு எச்சரிக்கைகள்அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் போலீசாரின் பினாமிகள் தான் பெரும்பாலும் ஒயின்ஷாப்களை நடத்துகின்றனர். தென் மாவட்டங்களில் சாராயம் காய்ச்சுவது,கந்து வட்டித் தொழில் நடத்துவது, மேலும் வெளியில் சொல்ல முடியாத சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது என போலீசாரின் தரம்தாழ்ந்து கொண்டே வருகிறது.
கடும் ஏழ்மை காரணமாக மிக அதிகமான வட்டிக்குப் பணம் வாங்கிவிட்டு அதை பல ஆண்டுகள் ஆனாலும் அடைக்க முடியாமல் பலகுடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தவண்ணம் உள்ளன. வட்டியைத் தர முடியாத குடும்பங்களின் வீடுகளுக்குள் நுழைந்து அந்த வீட்டின்பெண்களின் வட்டிக் கும்பல்கள் தவறான முறையில் நடந்து வருகின்றன.
இதை சகிக்க முடியாத குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக தற்கொலையில் இறங்குகின்றன. இதில் வட்டிக் கும்பல்களுக்கு போலீசார்பின்னணியில் இருப்பது தான் மிகப் பெரிய சோகமாகும். வட்டித் தொழில் நடத்தும் பலருக்கு பணம் தருவதே போலீசார் தான். குறிப்பாகமதுரை, நெல்லை, கோவை, சென்னை ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமான வட்டித் தொழிலில் போலீசாரின் பங்க மிக அதிகம்.
அபரிமிதமாக கைக்கு வரும் மாமூலை போலீசார் தங்கள் பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் மூலம் வட்டித் தொழிலில் முதலீடு செய்து அதைபலமடங்காக்கி வருகின்றனர்.
கந்து வட்டி, ரன் வட்டி, தவணை வட்டி, மீட்டர் வட்டி, ஜாக்பாட் வட்டி, கடப்பாறை வட்டி என பல வகையான வட்டிகள் உள்ளன.ஒவ்வொன்றும் ஒன்றை மிஞ்சும். இவர்களிடம் சிக்கி நாறுவது கூலித் தொழிலாளிகளும் கீழ் நடுத்தர மக்களும் தான்.
இந் நிலையில் வட்டித் தொழிலில் ஈடுபட்டு போலீசார் குறித்து ரகசிய சர்வே நடத்துமாறு மாநில உளவுப் பிரிவுக்கு தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் உள்ள எல்லா காவல் நிலையங்களிலும் இந்த ஆய்வு நடக்கவுள்ளது.
ஆயுதப் படை, சிறப்புக் காவல் படை ஆகியவற்றில் பணியாற்றும் போலீசாருக்கு மாமூல் ஏதும் வருவதில்லை. இதனால் இவர்கள் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதும் குறைவாகவே உள்ளது.
ஆனால், காவல் நிலையங்களில் கிரைம் பிரிவிலும் சட்டம்-ஒழுங்குப் பிரிவிலும் உள்ள காவலர்களுக்கு தினம் தினம் தீபாவளி தான்.அதிலும் ஒரு ஸ்டேசனில் சட்டம்-ஒழுங்குப் பிரிவு போலீசாருக்கு ஒரு நாளைக்குக் கிடைக்கும் லஞ்சம் பல ஆயிரத்தைத் தாண்டும்.
இதை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ரவுடிகள் மூலம் வட்டிக்கு விட்டு வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications