தமிழக விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை கர்நாடகம் தான் ஈடு செயய வேண்டும்: ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காவிரியில் நீரை விடாததால் தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஏற்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டத்தை கர்நாடகம் தான் வழங்கவேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இன்று தமிழக விவசாயிகள் தட்டு ஏந்தி நிற்கக் காரணம் கர்நாடகம் தான். சட்டப்படி தமிழகத்துக்குத் தர வேண்டிய நீரை தடுத்து நிறுத்திக்கொண்டு நம் மாநில விவசாயிகளின் உயிரோடும் பயிரோடும் விளையாடியது கர்நாடகம்.

இதனால் தமிழகத்தில் விவசாயிகள் அடைந்த நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டியது கர்நாடகத்தின் பொறுப்பு. அதைப் பெற வேண்டியதுதமிழகத்தை ஆளும் அதிமுக அரசின் பொறுப்பு.

கர்நாடகத்திடம் இருந்து தமிழக விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈட்டைப் பெற தமிழக அரசு சட்டரீதியிலான நடவடிக்கைகளில் இறங்கவேண்டும்.

அதைவிட்டுவிட்டு இலவச சாப்பாடு போடுகிறேன் என்று சொல்லி நமக்கு சோறு போட்ட விவாயியையே கையில் தட்டு கொடுத்துநிறுத்துவது கொடுமையான விஷயம். இதை உடனே தமிழக அரசு நிறுத்த வேண்டும்.

இன்னமும் அந்த ஏழை விவசாயிகளின் மானத்துடன் விளையாடாமல் அவர்களுக்கு ரேசன் கடைகள் மூலம் இலவசமாக அரிசி, பருப்பைவழங்க வேண்டும். அடுத்த ஜூன்-ஜூலை மாதத்தில் மழை பெய்தால் மீண்டும் பயிரிடும் பணி ஆரம்பிக்கும். அதுவரை இலவசமாகவிவசாயிகளுக்கு உணவு தானியங்களைத் தர வேண்டும்.

கிட்டத்தட்ட 6 கோடி விவசாயிகள் பசி, பட்டினியில் வாடுகின்றனர். 1.5 கோடி விவசாயக் கூலிகளும் உண்ண வழியில்லாமல் நொந்துபோய் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இவர்களில் வெறும் 6 லட்சம் பேர் மட்டுமே அரசின் இலவச உணவுத் திட்டத்தை ஏற்க முன்வந்துள்ளனர். இதன்மூலம் இத் திட்டம் பெரும் தோல்வி என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

அரசுக்கு விளம்பரம் தேடும் வகையில் விவசாயிகளின் மானத்தோடு விளையாடும் இந்த குளறுபடி நிறைந்த திட்டத்தை அரசு உடனேநிறுத்த வேண்டும். இத் திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு 2 பிடி அரிசியும், 35 பைசா மதிப்புள்ள காய்கறிகளும் வழங்கப்படுகின்றன.

35 பைசாவுக்கு என்ன காய்கறியை போட்டுவிட முடியும்? உழைக்கும் உழவன் ஒரு நாளைக்கு வெறும் 2 பிடி அரிசியைச் சாப்பிட்டு எப்படிஉயிர் வாழ்வான்?

சாத்தான்குளம் இடைத் தேர்தலை மனதில் வைத்து கொண்டு வரப்பட்ட இந்த உதவாத திட்டத்தை நிறுத்திவிட்டு விவசாயிகளின்பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு மாற்று வேலைகள் கிடைக்கச் செய்ய வேண்டும். நிறைய கூலித்தொழிலாளர்கள் தேவைப்படும் அரசுப் பணிகளை உடனே துவக்கி இவர்களுக்கு வேலை தர வேண்டும்.

கருகிப் போன பயிர்களால் கிட்டத்தட்ட 10 விவசாயிகள் உயிரை விட்டுள்ளனர். அவர்களது குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத்தைதமிழக அரசு வழங்க வேண்டும். இவை சாதாரணச் சாவுகள் தான் என்று அதிகாரிகள் மூலம் வெட்டி விளக்கம் தரும் போக்கை அரசு நிறுத்தவேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

மீண்டும் எலி, நத்தை:

மானம் பெரிதென நினைக்கும் பல விவசாயக் குடும்பங்களும் இலவச உணவுக்காக தட்டு ஏந்தி நிற்பதைத் தவிர்த்துவிட்டு அமைதியாகமீண்டும் எலிக் கறி, நத்தை, நண்டுகளைப் பிடித்து உண்ண ஆரம்பித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி அருகே உள்ள பலாகொல்லைமேட்டில் விவசாயிகள் மீண்டும் எலி, நத்தைகளைப் பிடித்து சாப்பிடஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வேலை ஏதும் இல்லாததால் குழந்தைகளுக்கு பால் வாங்க காசில்லாத ஏழை விவசாயக் கூலிப் பெண்கள் பிச்சை எடுக்கவும்ஆரம்பித்துள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+