திருவைய்யாற்றில் பஞ்சரத்ன கீர்த்தனைகள் இசைக்கப்பட்டன
திருவைய்யாறு:
திருவைய்யாற்றில் நடந்து வரும் தியாகராஜ சுவாமிகளின் 156வது ஆராதனை விழாவில் இன்று பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடப்பட்டன.
இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் கூடி ஒரே நேரத்தில் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப்பாடினர். இதற்காக திருவைய்யாற்றில் கர்நாடக இசைக் கலைஞர்கள் குவிந்துவிட்டனர்.
அனைத்துக் கலைஞர்களும் சேர்ந்து பாடுவது தான் பஞ்சரத்தின கீர்த்தனைகளாகும்.
மதுரை டி.என். சேஷகோபாலன், வீணை காயத்ரி, பாம்பே சகோதரிகள், சுதா ரகுநாதன், சீர்காழி சிவ சிதம்பரம், மாண்டலின் சீனிவாஸ், கதரிகோபால்நாத், உன்னி கிருஷ்ணன், குன்னக்குடி வைத்தியநாதன், ஜேசுதாஸ் ஆகியோர் திருவைய்யாற்றில் உள்ளனர். இவர்களது தனி இசைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
தியாகப் பிரம்மம் தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளை மூப்பானாரின் குடும்பத்தினர் தான் பல ஆண்டுகளாக முன்நின்று நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு ஜி.கே. வாசன் தனது தந்தையின் வழியில் இந்த நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்தி வருகிறார்.
-->












Click it and Unblock the Notifications