யாழ்பாணத்தில் உளவு விமானம் விழுந்து நொறுங்கியது

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான விமான இல்லாமல் பறக்கும் உளவு விமானம் யாழ்பாணத்தில் தரையில் விழுந்துநொறுங்கியது.

அரசுக்கும் புலிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளபோதிலும் இலங்கை ராணுவத்தின் தரப்பில்தொடர்ந்து உளவு பார்ப்பது தொடர்கிறது.

இந் நிலையில் இஸ்ரேலிடம் இருந்து இலங்கை வாங்கிய விமானில்லா உளவு விமானம் இன்று காலை பலாலி விமானத் தளத்தில் இருந்துபுறப்பட்டு புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளின் மீது பறந்து உளவு பார்த்தது.

பின்னர் பலாலிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென தரைக்கட்டுப்பாட்டுடன் தொடர்பை இழந்தது. அலாவெட்டி என்ற கிராமத்தில்வெங்காய வயல்கள் மீது அந்த விமானம் விழுந்து நொறுங்கியது.

இது இலங்கை விமானப் படை இழந்துள்ள 3வது ஆளில்லா விமானமாகும். இன்னும் அதனிடம் ஒரு விமானம் தான் பாக்கி உள்ளது.

இரு ஆண்டுகளுக்கு முன் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் புலிகள் நடத்திய மிக பயங்கரமான தாக்குதலில் இலங்கை ராணுவம்தனது கிபிர் ரக குண்டு வீச்சு விமானங்களை கூண்டோடு இழந்தது நினைவுகூறத்தக்கது. அவையும் இஸ்ரேலிடம் இருந்துவாங்கப்பட்டவையே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+