கட்டப் பஞ்சாயத்து: இடையில் புகுந்து ரூ. 3 கோடியை சுருட்டிய வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன்
சேலம்:
சேலத்தில் பட்டு உற்பத்தியாளர்கள் மோசடி செய்யப்பட்டது தொடர்பான முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் மீதுநடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தினர் மீது கட்டப் பஞ்சாயத்து செய்வதாக காலம் காலமாக புகார் உண்டு. குறிப்பாக திமுக ஆட்சியில்இருக்கும்போதெல்லாம் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன்களின் அட்டகாசம் கொடி கட்டிப் பறப்பது உண்டு.
கட்டப் பஞ்சாயத்தில் கொடி கட்டிப் பறந்த அவரது மூத்த மகன் செழியன் இறந்துவிட்டார். ஆனால், அவரது இளைய மகன் ராஜாவும் இதுபோன்ற அடாவடியில் ஈடுபட்டு வந்தார். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இப்போது கொஞ்சம் அடங்கிக் கிடக்கிறார்.
பணம், நிலம் சம்பந்தமாக காவல் நிலையத்துக்கு வரும் வழக்குகளில் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன்கள் தலையிட்டு கட்டப் பஞ்சாயத்துசெய்து அதில் பெரும் பணத்தை ஈட்டி வந்தனர். இவர்களக்கு அம் மாவட்ட எஸ்.பி, சேலம் நகர போலீஸ் கமிஷ்னரும் உடந்தையாகஇருந்தனர். அவர்களும் இதில் பெரும் பணம் பார்த்தனர்.
இந் நிலையில் ஆட்சி மாறியவுடன் அதிமுக அரசு தூக்கி அடித்த அதிகாரிகளில் சேலம் கமிஷ்னரும் ஒருவர். அவர் மீது அளவுக்குஅதிகமாக சொத்து சேர்த்த வழக்கும் போடப்பட்டுள்ளது.
இப்போது பழைய கட்டப் பஞ்சாயத்து வழக்கில் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜா மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்குமுதல்வர் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
சேலத்தை அடுத்துள்ள கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த பட்டு நெசவாளர்கள் 25 பேர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மணிவண்ணன்என்பவரிடம் தங்களது பட்டுச் சேலைகளை விற்று வந்தனர். ஆனால், இவர்களுக்கு உரிய பணத்தை மணிவண்ணன் தரவில்லை.கிட்டத்தட்ட ரூ. 3 கோடி வரை இவர் பாக்கி வைத்திருந்தார்.
இதையடுத்து பட்டு நெசவாளர்களுக்கும் மணிவண்ணனுக்கும் பிரச்சனை ஏற்பட்டது. 1999ம் ஆண்டில் இரு தரப்பினருக்கும் அடிதடிஏற்படும் நிலை உருவானது. மணிவண்ணனை பட்டு உற்பத்தியாளர்கள் தங்கள் வீட்டில் பூட்டி வைத்தனர்.
இதையடுத்து அப்போது அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜாவின் உதவியை மணிவண்ணனின் ஆட்கள் நாடினர்.
உடனே தனது கோஷ்டியுடன் அங்கு வந்த ராஜா பட்டு நெசவாளர்களை மிரட்டிவிட்டு மணிவண்ணனை மீட்டுச் சென்றார்.
மணிவண்ணனை தனது பூலாவாரி பண்ணை வீட்டில் அடைத்து வைத்த ராஜா, அவர் நெசவாளர்களுக்குத் தர வேண்டிய ரூ. 3 கோடியைவசூலித்துக் கொண்டு விடுவித்தார்.
பணம் ராஜாவிடம் இருப்பதை அறிந்த பட்டு நெசவாளர்கள் அவரிடம் போய் தங்களிடம் அந்தப் பணத்தைத் தருமாறு கேட்டனர்.அப்போது ராஜாவின் ஆட்கள் பட்டு நெசவாளர்களை அரிவாள்களைக் காட்டி மிரட்டி விரட்டியடித்தனர்.
பட்டுச் சேலைகளை வாங்கிய மணிவண்ணன், பட்டுச் சேலைகளை விற்ற நெசவாளர்களுக்கு இடையில் புகுந்து அவர்களுக்குச்சொந்தமான பணத்தை வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தினர் பறித்தனர்.
இதையடுத்து மணிவண்ணன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், உடனே பட்டு நெசவாளர்களை அழைத்த ராஜா அவர்களிடம்ரூ. 1 லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு அமைதியாக இருக்குமாறு மீண்டும் மிரட்டினார்.
திமுக ஆட்சியில் இருந்ததால் மேற்கொண்டு போலீஸ் உதவியும் கிடைக்காமல் அந்த பட்டு நெசவாளர்கள் அடக்கப்பட்டனர்.
இந் நிலையில் ஆட்சி மாறியது. மீண்டும் ராஜாவிடம் போய் தங்கள் பணத்தை பட்டு நெசவாளர்களும் மணிவண்ணனும் கேட்டனர்.ஆனால் பணத்தைத் தர அவர் மறுத்தார்.
இதையடுத்து சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவை பட்டு நெசவாளர்கள் நேரில் சந்தித்து தங்களுக்கு நடந்த கொடுமையை விளக்கினர்.இதைத் தொடர்ந்து உடனே இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்குமாறு சேலம் மாவட்ட எஸ்.பி. மாகாலிக்கு ஜெயலலிதா உத்தரவிட்டார்.
சில வாரங்களுக்கு முன்பே ராஜாவிடம் விசாரணையை ஆரம்பித்துவிட்டனர் போலீசார். கொண்டாலப்பட்டி இன்ஸ்பெக்டர்விவேகானந்தன் தலைமையில் ராஜாவை போலீசார் துருவி வருகின்றனர். அவர் கைதும் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
சேலம் மாவட்டத்தில் பலரது நிலங்களையும் வணிக வளாகங்களையும் வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தினர் அடாவடி மூலம்ஆக்கிரமித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
-->
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications