நாகப்பாவை கடத்த வீரப்பனுக்கு உதவிய மேலும் 2 பேர் கைது
பெங்களூர்:
நாகப்பா கடத்தலில் வீரப்பனுக்கு உதவிய மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகப்பா கடத்தல் விவகாரத்தில் முதலில் 3 தமிழ்த் தீவிரவாதிகள் பெரம்பலூரில் கைதாயினர். அவர்கள் கொடுத்த தகவல்களை வைத்துதொடர்ச்சியாக தமிழகத்திலும் கர்நாடகத்திலும் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந் நிலையில் மேலும் 2 பேரை கர்நாடக அதிரடிப்படை கைது செய்துள்ளது. சாம்ராஜாநகர் கொள்ளேகால் தாலுகாவைச் சேர்ந்த பசவா,நஞ்சே கெளடா ஆகிய இருவகும் நேற்று கெஞ்சங்கனஹள்ளி காட்டுப் பகுதியில் பிடிபட்டனர்.
நாகப்பாவை வீரப்பன் கடத்தியபோது இவர்கள் வீரப்பன் கும்பலுக்குப் பாதுகாப்பாக நாகப்பாவின் வீட்டின் முன்நின்றிருந்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். நாகப்பாவின் பாதுகாப்புக்கு இருந்த போலீசால் வீரப்பனுக்கு ஏதாவதுபிரச்சனை வந்தால் போலீஸ்காரக்களைத் தாக்கத் தயாராகக் காத்திருந்ததாக இவர்கள் கூறியுள்ளனர்.
இதற்காக இவர்களுக்கு வீரப்பன் தலா ரூ. 5,000 கொடுத்துள்ளான்.
மேலும் அமைச்சர் ராஜூ கெளடாவின் வீட்டுக்கும் வீரப்பன் கும்பலை இவர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.ஆனால், அன்று ராஜூ கெளடா வீட்டில் இல்லாததால் நாகப்பாவை மட்டும் கடத்திக் கொண்டு வீரப்பன்தப்பியுள்ளான்.
நாகப்பாவுடன் வீரப்பன் லோகானஹள்ளி காட்டுப்பகுதியில் மறைந்திருந்தபோது பலமுறை உணவுப்பொருள்களை இவர்கள் சப்ளை செய்துள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications