அமெரிக்கா to
நியூயார்க்:
அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் 10 ஆண்டுகளில் 2,349 சதவீதம்உயர்ந்துள்ளது.
கடந்த 1991ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு 59 மில்லியன் நிமிடங்களுக்கு தொலைபேசிஅழைப்பு பரிமாற்றங்கள் நடந்தது.
ஆனால், 2001ம் ஆண்டில் இது 1.4 பில்லியன் நிமிடங்களாக அதிகரித்ததுவிட்டது. அமெரிக்காவில் பணிபுரியும்இந்தியர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது தான் இதற்குக் காரணம்.
அமெரிக்காவில் உள்ள டெலிஜியோகிராபி என்ற ஆய்வு நிறுவனம் இந்தப் புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது.
மேலும், உலக அளவில் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்குத்தான் அதிகமான அளவில் தொலைபேசிஅழைப்புக்கள் வருவதாகவும் இந்நிறுவனம் கூறுகிறது. உலகம் முழுவதும் 120 நாடுகளின் சர்வதேச தொலைபேசிகால்கள் குறித்து இந் நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது.
ஆனால், அதே நேரத்தில் இந்தியர்கள் வெளிநாடுகளுக்குப் பேசுவது மிகக் குறைவு என்றும் இதன் ஆய்வில்தெரியவந்துள்ளது. சராசரியாக ஒரு இந்தியர் ஆண்டுக்கு 30 வினாடிகளுக்கும் குறைவாகவே வெளிநாடுகளுக்குபோன் செய்கிறார்.
இந்தியாவில் தொலைபேசிக் கட்டணம் குண்டக்க மண்டக்க இருந்தது தான் காரணம். இப்போது கட்டணத்தில்பெரும் வீழ்ச்சி ஏற்பட்டு வருவதால் இந்த நிலை ஒருவேளை மாறலாம்.
அதே நேரத்தில் அதிக அளவில் சர்வதேச தொலைபேசி கால்கள் செய்யும் தனி நபர்கள் அதிகம் இருப்பதுலக்சம்பர்க்கில் தான். இதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச்சேர்ந்தவர்களும் அதிகமான வெளிநாட்டு தொலைபேசி கால்களை செய்கின்றனர்.
உலக அளவில் பேசப்படும் சர்வதேச கால்களில் நான்கில் ஒரு பங்கு அமெரிக்காவில் இருந்து தான்பேசப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து அதிகம் போன் மூலம் பேசப்பட்ட நாடு மெக்சிகோ தான். அடுத்த நாடுகனடா.
-->












Click it and Unblock the Notifications