உலக கோப்பை: இந்தியா விளையாடுமா?- நாளை தெரியும்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒப்பந்த விவகாரத்தைத் தொடர்ந்து உலகக் கோப்பை கிரிக்கெட்போட்டிகளில் இந்திய அணி விளையாடுமா என்பது குறித்து நாளை இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றுதெரிகிறது.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் அணியினர் விளம்பரம்தொடர்பான தங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்றுஐ.சி.சி. கெடு விதித்திருந்தது.

உலகக் கோப்பை போட்டிகளின்போது ஐ.சி.சி. அனுமதி அளிக்கும் விளம்பரங்களில் மட்டுமே வீரர்கள் தோன்றவேண்டும், வீரர்கள் அணியும் உடைகளில் கூட ஐ.சி.சி. கூறும் விளம்பர பேட்ஜுகள்தான் பயன்படுத்தப்படவேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள்தான் அந்த ஒப்பந்தத்தில் உள்ளன.

ஆனால் இந்திய வீரர்கள் முதலில் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இருந்தாலும் சில நிபந்தனைகளுடன் பின்னர்அவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். குறிப்பாக ஐ.சி.சி. அனுமதிக்கும் விளம்பரங்களில் மட்டுமே தோன்றவேண்டும் என்ற ஒப்பந்தத்திற்குக் கட்டுப்பட இந்திய வீரர்கள் உறுதியாக மறுத்து விட்டனர்.

இதற்கிடையே இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது ஐ.சி.சி. நடவடிக்கை எதுவும் எடுத்தால் அது ஏற்பாடு செய்துள்ளபெப்சி, எல்.ஜி., ஹீரோ ஹோன்டா போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் அந்நிய செலாவணி மூலம் பணம்சம்பாதிப்பதை இந்தியா அனுமதிக்காது என்று டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இந்நிலையில் உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா பங்கேற்குமா என்பது குறித்து இறுதி முடிவெடுப்பதற்காகஐ.சி.சி. தன்னுடைய செயற்குழுவை நாளை கூட்டியுள்ளது.

வீடியோ-டெலி-கான்பரன்ஸ் மூலம் ஐ.சி.சியுடன் நாளை பேச்சு நடத்தி இந்திய கிரிக்கெட் போர்டும் தன்னுடையஇறுதி முடிவை அறிவிக்கவுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சில நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு அவர்களை உலகக் கோப்பைப் போட்டிகளில்விளையாடுவதற்கு ஐ.சி.சி. அனுமதிக்கும் என்றே கூறப்படுகிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+