பிரான்சில் அத்வானி: முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்து

Subscribe to Oneindia Tamil

பாரிஸ்:

குற்றவாளிகளை பரஸ்பரம் ஒப்படைத்துக் கொள்ளும் வகையில் இந்தியாவும் பிரான்சும் ஒப்பந்தம் செய்து கொள்ள உள்ளன.இதற்கான ஒப்பந்தத்தில் துணைப் பிரதமர் அத்வானி கையெழுத்திட உள்ளார்.

கத்தார் நாட்டில் இருந்து நேற்றிரவு அத்வானி பிரான்ஸ் வந்தார். இரண்டு நாட்கள் பயணமாக பிரான்ஸ் வந்துள்ள அத்வானிதீவிரவாதத்தை ஒழிப்பது தொடர்பாக அந் நாட்டுத் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனைகள் நடத்த உள்ளார்.

பாரிசின் ஓர்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய அத்வானிக்கு மிகச் சிறப்பான வரவேற்பை பிரானஸ் அரசு வழங்கியது.சிவப்புக் கம்பளத்துடன் வரவேற்று அழைத்துச் செல்லப்பட்டார் அத்வானி.

அவரும் பிரஞ்ச் நீதித்துறை அமைச்சர் டொமினிக் பெர்பெனும் குற்றவாளிகளை பரஸ்பரம் ஒப்படைத்துக் கொள்வது தொடர்பானமுக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர். பிரிட்டனுக்கு அடுத்தபடியாக இந்தியாவுடன் இது போன்ற ஒப்பந்தம் செய்துகொள்ளும் முக்கிய ஐரோப்பிய நாடு பிரான்ஸ் தான்.

பிரான்ல் பிரதமர் ஜீன் பியர்ரி ரப்பாரினையும் அத்வானி சந்தித்துப் பேச உள்ளார். மேலும் பாதுகாப்பு அமைச்சர் மிச்செலிஅலியட் மேரியையும், உள்துறை அமைச்சர் நிகோலஸ் ஸர்கோசியுடனும் அத்வானி பேச்சு நடத்துவார்.

ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுப்பதை பிரான்ஸ்சும் ஜெர்மனியும் மிகக் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இது தொடர்பானதீர்மானத்தை அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுனிசிலில் கொண்டு வந்தால் அதை பிரான்ஸ் தனது வீடோஅதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஈராக் விவகாரத்தில் இந்தியாவின் ஆதரவை பிரான்ஸ் கோரும் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் பிரான்ஸ்அமைச்சர்கள் அத்வானியுடன் பேசுவர்.

ஈராக்கைத் தாக்கக் கூடாது என்று இந்தியாவும் கூறி வருகிறது. ஆனால், அமெரிக்க- இந்திய உறவு மிகவும் நெருக்கமடைந்துள்ளநிலையில் இந்த விஷயத்தில் தீவிர நிலையை எடுக்க இந்தியா தயாராக இல்லை.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+