தீவிரவாதத்தை ஒடுக்குவதில் தமிழகம் தீவிரம்: ஆளுநர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தீவிரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை ஒடுக்குவதில் தமிழக அரசு உறுதியுடன் உள்ளது என ஆளுநர்ராமமோகன் ராவ் கூறினார்.

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது சட்டம்-ஒழுங்குதொடர்பாக ஆளுநர் உரை மூலம் அரசு கூறியதாவது:

தீவிரவாதம் மற்றும் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளைமேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாகப் பராமரிக்கப்பட்டது.

மும்பையிலும் ஹைதராபாத்திலும் பயங்கரவாதத்தைத் தூண்டிவிட்ட பாகிஸ்தான், தமிழகத்தின்கோயம்புத்தூரிலும் குண்டுவெடிப்புக்களை நடத்தியது. இது போன்ற பயங்கரவாதச் செயல்களை இந்திய அரசுநசுக்கி வருகிறது.

மத்திய அரசுக்கு உதவியாக தமிழக அரசும் தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் தீவிரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை ஒடுக்கப்படும். இதன்மூலம் நாட்டின் ஒற்றுமையை கட்டிக் காக்கும் கடமையை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது.

வீரப்பனால் கடத்தப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா கொல்லப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது.பல ஆண்டுகளாகத் தொல்லை கொடுத்து வரும் வீரப்பனை விரைவில் பிடிக்க அனைத்து நடவடிக்கைகளும்மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழக அதிரடிப்படையினர் கர்நாடக அதிரடிப்படையினருடன் சேர்ந்து வீரப்பனை விரைவில் பிடிப்பார்கள்.இவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

நக்சல்களின் தொல்லை அதிகமுள்ள தருமபுரி மாவட்டத்தில் இளைஞர்களின் நலனை மேம்படுத்த காவல்துறையினரின் உதவியுடன் பல வளர்ச்சித் திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படவுள்ளன. தமிழககாவல்துறையை நவீனப்படுத்த ரூ.272 கோடி செலவில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

இந்தியாவிலேயே முதன்முறையாக அனைத்து மகளிர் காவல் படையை உருவாக்கும் முயற்சியும்மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் ராமமோகன் ராவ்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+