இலவச மதிய உணவு திடீர் மறுப்பு: கண்ணீருடன் திரும்பிய விவசாயிகள்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தில் இலவச மதிய உணவுத் திட்ட பட்டியலிலிருந்து 192 விவசாயிகள்திடீரென நீக்கப்பட்டனர். இதனால் தட்டுக்களுடன் வந்த ஏழை விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டுகண்ணீருடன் போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் விளைவிபட்டி கிராமத்தில் உள்ள ஒரு இலவச மதிய உணவு மையத்தில் கடந்த பொங்கல்தினம் முதல் 219 விவசாயிகளுக்கு உணவு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் வழக்கம் போலவே 219 விவசாயிகளும் இலவச மதிய உணவைப் பெறுவதற்காக இன்றுமையத்திற்கு வந்திருந்தனர்.

ஆனால் 27 விவசாயிகள் பெயர்தான் என்று பட்டியலில் உள்ளது என்று கூறிய உணவு மைய அதிகாரிகள், மற்ற192 விவசாயிகளுக்கும் உணவு அளிக்க முடியாது என்று கூறி அவர்களை விரட்டினர்.

இதனால், மிகுந்த நம்பிக்கையில் கையில் தட்டுக்களுடன், குழந்தைகளுடன் வந்த அந்த ஏழை விவசாயிகளின்கண்களில் நீர் முட்டியது.

பசியில் நின்றிருந்த அவர்கள் கடும் கோபமடைந்தனர். உடனே அனைத்து விவசாயிகளும் அந்த அதிகாரிகளைமுற்றுகையிட்டனர். கத்திப் பார்த்தனர், கெஞ்சிப் பார்த்தனர். ஆனால், எந்தப் பலனும் ஏற்படவில்லை.

வெறும் 27 பேருக்கு மட்டுமே உணவு தருவோம் என அதிகாரிகள் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர். ஆனால்,உணவு கிடைக்காத மற்ற விவசாயிகளுக்கு ஆதரவாக இந்த 27 பேரில் 23 பேர் உணவு வாங்க மறுத்துவிட்டனர்.

ஆனால், மீதமிருந்த 4 விவசாயிகள் மட்டுமே உணவு வாங்கினர். இவர்கள் அதிமுக விவசாயப் பிரிவைச்சேர்ந்தவர்கள்.

மற்ற 215 விவசாயிகளும் உணவு ஏதும் வாங்காமலேயே வெறும் பாத்திரங்களுடன் சோகத்துடன் வீடுகளுக்குத்திரும்பினர்.

219 பேருக்கு உணவு தந்த அதிகாரிகள் திடீரென 27 பேருக்கு மட்டுமே உணவு தருவோம் என்று அறிவித்தது ஏன்என்று தெரியவில்லை.

ஏற்கனவே, இலவச உணவுத் திட்டத்தை சிறிய அளவிலான விவசாயிகள் தான் பெற முன் வந்தனர். இவர்களிலும்கூப்பன் கேட்ட விவசாயிகளில் மிகச் சிலருக்குத் தான் அவை தரப்பட்டன. இப்போது கூப்பன் வைத்திருக்கும்விவசாயிகளும் கூட உணவில்லை என்று விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+