ரூ.40,000 லஞ்சம் கேட்ட போலீஸ் உதவி கமிஷனர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் தொழிலதிபரிடம் ரூ.40,000 லஞ்சம் கேட்ட போலீஸ் உதவி கமிஷனரான கோடீஸ்வரன் கையும்,களவுமாகப் பிடிபட்டார்.

திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராகவேந்திரன் தனக்குச் சொந்தமான ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையைசென்னை வேப்பேரி பகுதியில் நிறுவியிருந்தார்.

இங்கு வேலை பார்த்து வந்த இரண்டு பேர் நிறுவனத்திலிருந்த ஆடைகளை வெளியில் எடுத்துச் சென்று விற்றுவந்தது சமீபத்தில் ராகவேந்திரனுக்குத் தெரிய வந்தது.

இதையடுத்து கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனரான கோடீஸ்வரனிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் விசாரணைநடத்திய கோடீஸ்வரன், சம்பந்தப்பட்ட இரண்டு பேரில் ஒருவரைக் கைது செய்து, பணத்தைக் கைப்பற்றினார்.

இந்நிலையில் கைப்பற்றப்பட்ட பணம் திரும்ப வேண்டுமானால், தனக்கு ரூ.40,000 கொடுக்க வேண்டும் என்றுராகவேந்திரனிடம் பேரம் பேசினார் கோடீஸ்வரன்.

ஆனால் தன்னால் அவ்வளவு பெரிய தொகையெல்லாம் தர முடியாது என்று கூறிய ராகவேந்திரன் ரூ.25,000தருவதாக கூறினார். அதற்கு கோடீஸ்வரனும் ஒப்புக் கொண்டார்.

பணம் எடுத்து வருவதாக கூறி காவல் நிலையத்தை விட்டு வெளியே சென்ற ராகவேந்திரன், நேராக லஞ்ச ஒழிப்புப்போலீஸாரிடம் சென்று புகார் கொடுத்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புப் போலீஸாரின் அறிவுரைப்படி, ஆலந்தூரில் உள்ள கோடீஸ்வரனின் வீட்டுக்குச்சென்றார் ராகவேந்திரன்.

அங்கு கோடீஸ்வரனிடம் பணத்தைக் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் கோடீஸ்வரனைக்கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+