சாத்தான்குளம்: காங்கிரசின் அஜாக்கிரதை குறித்து கிருஷ்ணசாமி கவலை
கோயம்புத்தூர்:
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் ஓட்டுக்கள் சிதறி விடாமல் இருக்க காங்கிரஸ் கட்சிதான்அவர்களை ஒன்று திரட்ட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
கோயம்புத்தூரில் இன்று அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
மக்கள் விரோத ஆட்சி நடத்தி வரும் அதிமுக அரசுக்குப் பாடம் கற்பிப்பதற்கு சாத்தான்குளம் இடைத் தேர்தல்தான்ஒரே வாய்ப்பு. அந்த வாய்ப்பை காங்கிரஸ் கட்சி நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆனால் இவ்விஷயத்தில் காங்கிரஸ் கட்சி மிகவும் அஜாக்கிரதையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தத்தேர்தலில் போட்டியிடவுள்ள காங்கிரஸ் எதிர்க் கட்சிகளின் ஒட்டுமொத்த ஆதரவை எப்பாடுபட்டாவது பெற்றாகவேண்டும்.
திமுக, பாமக, மதிமுக போன்ற பெரிய கட்சிகளை மட்டுமில்லாமல் எங்களைப் போன்ற சிறிய கட்சிகளின்ஆதரவையும் காங்கிரஸ் பெற முயற்சிக்க வேண்டும்.
இல்லையென்றால் எதிர்க் கட்சிகளுக்கு விழும் ஓட்டுக்களெல்லாம் சிதறிப் போய், அதுவே அதிமுகவின்வெற்றிக்கும் வழி வகுத்து விடும்.
இவ்விஷயத்தில் காங்கிரஸ் கட்சி தெளிவான ஒரு முடிவை எடுக்காவிட்டால் எங்கள் கட்சியின் செயற்குழு வரும்27ம் தேதி கூடி முக்கியமான முடிவை எடுக்கும்.
சாத்தான்குளம் இடைத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக திமுக கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. எதிர்க்கட்சிகளின் ஓட்டுக்கள் சிதறி விடக் கூடாது என்ற நோக்கத்திலேயே திமுக இந்த முடிவை எடுத்துள்ளதாக நான்கருதுகிறேன்.
சாத்தான்குளத்தில் அதிமுகவுக்கு அடி விழுந்தால், அது மக்கள் விரோத அரசுக்கு மக்களே அளிக்கும் முதல்தண்டனையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றார் டாக்டர் கிருஷ்ணசாமி.
-->












Click it and Unblock the Notifications