சுவாமி பாகிஸ்தான் பயணம்: முஷாரபை சந்திக்கிறார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்தியா- பாகிஸ்தான் இடையில் மோசமடைந்துள்ள உறவை சீராக்க முடியுமா என்பது குறித்து ஆராய ஜனதா கட்சித் தலைவர்சுப்பிரமணியம் சுவாமி 3 நாள் பயணமாக வரும் சனிக்கிழமை இஸ்லாமாபாத் செல்கிறார்.

அந் நாட்டு ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரபையும் சுவாமி சந்திக்க உள்ளார்.

இந்தியா- இஸ்ரேல் இடையே நல்லுறவு ஏற்பட முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் சுவாமி. நரசிம்மராவ் ஆட்சியில்அவரை நெருக்கி இஸ்ரேலுடன் புதிய உறவைத் துவங்க வைத்தார்.

அதே போல இந்திய- சீன உறவும் மேலும் மேம்பட வேண்டும் என்று நெடுங்காலமாகவே கூறி வரும் சுவாமி இப்போதுபாகிஸ்தானுடனான உறவை மேம்படுத்துவதும் முயற்சிகளில் இறங்கியுள்ளார்.

ஆனால், இந்த தேதியில் இது நடக்கும், நான் அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று அதிகமான புருடாக்கள் விட்டதால்அரசியலில் தனது முக்கியத்துவத்தை சுப்பிரமணியம் சுவாமி இழந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதெல்லாம் இவர்சொல்வதை யாரும் நம்புவதே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.

ஆனாலும் இப்போதும் எந்த விவகாரத்திலும் பின்னணியில் இருந்து செயல்படுவதில் சுவாமிக்கு நிகர் அவர் தான். இந்தியாவின்வெளிநாட்டு உளவுப் பிரிவான ரா உடன் சுவாமிக்கு நல்லுறவு உண்டு.

இதனால் சுவாமியின் இந்த பாகிஸ்தான் பயணத்தை மத்திய அரசும் அனுமதித்துள்ளது. அதே நேரத்தில் நான் யார் சார்பிலும்செல்லவில்லை, தனிப்பட்ட முறையிலேயே செல்கிறேன் என சுவாமி விளக்கமளித்துள்ளார்.

இன்று டெல்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

இந்தியா- பாகிஸ்தான் இடையே வேறு வழிகளில் உறவை சீராக்க முடியுமா என்பது குறித்து அந் நாட்டுத் தலைவர்களுடன்பேசுவேன். குறிப்பாக அந் நாட்டு அதிபர் முஷாரபுடன் விரிவான பேச்சு நடத்த உள்ளேன்.

எனது இப் பயணம் தொடர்பாக துணைப் பிரதமர் அத்வானியுடன் பேசியுள்ளேன். இரு நாட்டு உறவுகளும் நமது உள்நாட்டுப்பாதுகாப்பும் என்பது குறித்த ரகசிய அறிக்கையை எனக்கு அளித்து உதவினார். இதற்காக அவருக்கு நன்றி. ஆனால்,அத்வானியின் தூதராக நான் அங்கு போகவில்லை.

உண்மையில் சொன்னால், வாஜ்பாய் அரசின் பாகிஸ்தான் கொள்கை மிகத் தவறானது. அது தொடர்ந்து தோல்வியைத் தழுவிவருகிறது. பாகிஸ்தான் ஆதரவுத் தீவிரவாதிகளின் தொல்லைக்கு உள்ளாகியும் கூட சர்வதேச அனுதாபத்தைப் பெற இந்தியாதவறிவிட்டது.

இதற்கு வாஜ்பாய் அரசின் தவறான கொள்கைகள் தான் காரணம். மேலும், ஒன்றுமே செய்ய முடியாத ஒரு நாடு என்ற கெட்டபெயர் தான் நமக்கு மிஞ்சியுள்ளது. இதை மாற்ற நமது அடிப்படைக் கொள்கையிலும் அணுகுமுறைகளிலும் பெரிய மாற்றம்தேவை என்றார் சுவாமி.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+