தமிழ் நீச மொழியா?: அரசுக்கு கருணாநிதி கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டசபையில் ஆளுநர்கள் ஆங்கிலத்தில் ஆற்றும் உரையின் தமிழாக்கம் வழக்கமாக சபாநாயகர்களால்வாசிக்கப்படும். இந்த மரபு இன்று உடைக்கப்பட்டது.

ஆளுநரின் ஆங்கில உரையை சபாநாயகர் காளிமுத்து தமிழில் படிக்கவில்லை. நேரமின்மை காரணமாக தமிழாக்கஉரை வாசிக்கப்படவில்லை என்று பின்னர் அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

சட்டசபையில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஆளுநர் உரை முடிந்தவுடன் அத்துடன் அவை ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது. பின்னர் நிருபர்களிடம் பேசியசபாநாயகர் காளிமுத்து,

சட்டசபைக் கூட்டத் தொடர் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. நாளை மணி நாடார் உள்ளிட்ட மரணமடைந்தமுன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவை ஒத்திவைக்கப்படும்.

மீண்டும் 28 மற்றும் 29ம் தேதிகளில் அவை கூடும். ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம்நடைபெறும். 30ம் தேதி விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர் பேசுவார். 31ம் தேதி 3 அவசரச் சட்டங்கள்நிறைவேற்றப்பட்டு அன்றே சபை ஒத்திவைக்கப்படும்.

நேரமின்மை காரணமாக ஆளுநர் உரை தமிழில் படிக்கப்படவில்லை என்றார்.

கருணாநிதி கண்டனம்:

ஆளுநரின் உரை தமிழில் வாசிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த ஒரு பாரம்பரியத்தை இந்த ஆட்சிஉடைத்தெறிந்திருக்கிறது. இதன் மூலம் தமிழுக்கு இந்த ஆட்சி தருகிறது முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழை இந்த ஆட்சி ஒருவேளை நீச மொழி என்று நினைத்திருக்கலாம்.

கடந்த ஆண்டுகளில் ஆளுநர் உரைகளின்போது அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை.இந் நிலையில் இன்றும் ஆளுநர் உரை மூலம் புதிய திட்டங்களை இந்த அரசு அறிவித்திருக்கிறது.

கடந்த ஆண்டு ஆளுநர் உரையில் கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்,தேர்தலே நடக்கவில்லை. இது போன்ற பொய்யான உறுதிமொழிகள் கொண்ட அரசின் அறிவிப்புகளை அடித்துக்கொண்டு போக காவிரியில் வெள்ளம் கூட வரவில்லையே என்று கவலையாக உள்ளது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று 2001ம்ஆண்டு ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எத்தனை முறை இதுவரை பேச்சுவார்த்தைகள்நடந்தன?

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதாக தமிழக அரசு கொடுத்த வாக்குறுதிகள் காற்றோடுபோய்விட்டன.

குடும்பத்துக்கு ஒரு வீடு என்ற தமிழக அரசின் திட்டமும் குப்பைத் தொட்டியில் கிடக்கிறது.

பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை, பான் பராக்குக்குத் தடை, பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை என்றுஅதிமுக அரசு கொண்டு வந்த தடைகள் எல்லாம் பராக்கு பார்த்துக் கொண்டிருக்கின்றன. எதுவும் முழுமையாகஅமலாக்கப்படவில்லை என்று கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இன்று தொடங்கிய சட்டசபைக் கூட்டத்திலும் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை.

இதற்கிடையே வரும் 31ம் தேதி ஒத்தி வைக்கப்படும் சட்டசபை, மீண்டும் மார்ச் முதல் வாரத்தில் கூடும். அப்போதுபட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+