இலங்கை அமைதிப் பேச்சு: ஜெர்மனியில் நடக்கும்?

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான அடுத்த கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள்ஜெர்மனியின் தலைநகரான பெர்லின் நகரில் நடக்கலாம் என்று தெரிகிறது.

புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம் நீரிழிவு நோய் காரணமாக நீண்ட தூரத்திற்கு அடிக்கடிபயணம் செய்யக் கூடாது என்று அவருடைய டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து தாய்லாந்தில் நடக்கவிருந்த அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகள் ஐரோப்பாவுக்கு மாற்றப்படுவதாகஅறிவிக்கப்பட்டது. ஆனால் ஐரோப்பாவில் எந்த நாட்டில் நடைபெறும் என்று தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகள் அநேகமாக பெர்லின் நகரில் நடைபெறும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இலங்கையில் தமிழர்கள் பெரும்பாலாக வசிக்கும் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் மறு சீரமைப்புநடவடிக்கைகளுக்காக சர்வதேச நிதியுதவி பெறுவது தொடர்பான கூட்டம் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும்இடையே இன்று நடைபெற்றது.

மிகவும் ரகசியமான இடத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளும்பலப்படுத்தப்பட்டிருந்தன.

அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட முக்கிய நிதி வழங்கும் நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள்இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இம்மாதத் துவக்கத்தில் நடைபெற்ற நான்காவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தையின் போதுதான், நிதிவிவகாரங்கள் தொடர்பான விஷயங்களை உலக வங்கி கவனித்துக் கொள்ளும் என முடிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே நிதி திரட்டும் விஷயத்தில் மற்ற நாடுகளைக் காட்டிலும் ஜப்பான் அதிக அளவில் இலங்கைக்கு உதவமுன் வந்துள்ளது. இலங்கை சீரமைப்புகளுக்காக ஏற்கனவே ஏராளமான நிதியை ஒதுக்கியுள்ள ஜப்பானின் சிறப்புத்தூதர் ஒருவர் சமீபத்தில் இங்கு ஒரு வாரத்திற்கும் மேலாக சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

தமிழர் பகுதிகள் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் அவர் நேரில் சென்று நிலைமையைக் கண்காணித்தார்.

இதற்கிடையே இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தை விஷயத்தில் முக்கியப் பங்காற்றி வரும் நார்வே நாட்டுக்குஅடுத்தபடியாக ஜப்பானும் தன்னை இணைத்துக் கொள்ள விரும்புகிறது.

ஆனால் இந்தியா இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இலங்கை சீரமைப்பு நடவடிக்கைகளுக்காக ஜப்பான்எவ்வளவு நிதி உதவி வேண்டுமானாலும் செய்து விட்டுப் போகட்டும், ஆனால் பேச்சுவார்த்தைகளில் எல்லாம்அந்நாடு நேரடியாகத் தலையிடக் கூடாது என்று இந்தியா கூறியுள்ளது.

தங்கள் நாட்டிலும் அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்று புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும்ஜப்பான் அழைப்பு விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த நவம்பர் மாதம் நார்வேயில் நடைபெற்ற நிதி திரட்டு மாநாட்டைப் போலவே மற்றொரு நிதிதிரட்டும் நிகழ்ச்சியை வரும் ஜூன் மாதம் தங்கள் நாட்டில் நடத்த ஜப்பான் ஏற்பாடு செய்துள்ளது என்பதும்குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+