அதிமுக சார்பில் சாத்தான்குளத்தில் போட்டியிட கடும் போட்டி: நூற்றுக்கணக்கானவர்கள் மனு
சென்னை:
சாத்தான்குளத்தில் அதிமுக சார்பில் போட்டியிட மறைந்த எம்.எல்.ஏ. மணி நாடாரின் மனைவி ஜானகி, முன்னாள் எம்.எல்.ஏக்கள்உள்ளிட்ட ஏராளமானோர் மனு செய்துள்ளனர். அங்கு போட்டியிட அதிமுகவினர் இடையே பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது.
காங்கிரசில் இருந்து உடைத்துக் கொண்டு வெளியேறிய அதிமுக ஆதரவு தமிழ் மாநில காமராஜ் காங்கிரசைச் சேர்ந்த மணி நாடார்மறைந்ததால் தான் அங்கு தேர்தல் நடக்கிறது. இதையடுத்து அவரது மனைவி ஜானகியை அதிமுகவில் சேர்த்தார் முதல்வர்ஜெயலலிதா.
இந் நிலையில் அடுத்த மாதம் 26ம் தேதி நடக்கவுள்ள அந்த இடைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து அதிமுகமனுக்களைப் பெற்று வருகிறது. கட்சியின் தலைமையகமான ராயப்பேட்டை அலுவலகத்தில் இன்று முதல் ரூ. 10,000 கட்சிமனுக்கள தரலாம் என்று றிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நாளான இன்றே பலரும் போட்டி போட்டுக் கொண்டு மனுக்களைக் கொடுத்தனர். காலை 9 மணிக்கே கட்சி அலுவலகத்தில்ஏராளமான அதிமுகவினர் குவிந்தனர். இவர்கள் வரிசையில் நின்று ரூ. 10,000 செலுத்தி விண்ணப்ப மனுக்களை வாங்கி பூர்த்திசெய்து சமர்பித்தனர்.
கட்சியின் கொ.ப.செ. ஓ.எஸ். மணியன் மனுக்களை வழங்கினார். பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை அதிமுக ஆட்சி மன்றக் குழுஉறுப்பினர் சுலோசனா சம்பத் (காங் செயல் தலைவர் இளங்கோவனின் தாயார்) பெற்றுக் கொண்டார்.
மணி நாடாரின் மனைவி ஜானகி, முன்னாள் சேரன்மாதேவி எம்.எல்.ஏக்கள் ஆர்.பி. ஆதித்தன், முன்னாள் தூத்துக்குடி எம்.எல்.ஏ.ரமேஷின் தம்பி வி.பி.ஆர். சுரேஷ், படத் தயாரிப்பாளர் ராஜ்பால், பஸ் அதிபர் ராஜன்பாபு, முன்னாள் ராதாபுரம் எம.எல்.ஏ.நல்லதம்பியின் தங்கை லதா, முன்னாள் திருச்செந்தூர் எம்.எல்.ஏ. செல்லதுரை உள்பட நூற்றுக்கணக்கானவர்கள் அதிமுக சார்பில்போட்டியிட மனுக்களைக் கொடுத்தனர்.
கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரான ஓ.எஸ். மணியன் மனுக்களை வழங்கினார். பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை அதிமுகஆட்சி மன்றக் குழு உறுப்பினர் சுலோசனா சம்பத் (காங் செயல் தலைவர் இளங்கோவனின் தாயார்) பெற்றுக் கொண்டார்.
இந்த மனுக்கள் மூலமே லட்சக்கணக்கான ரூபாய் அதிமுகவுக்கு வசூலாகியுள்ளது. இன்று மனு செய்தவர்களில்பெரும்பாலானவர்கள் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சாத்தான்குளத்தில் வெற்றியை நிர்ணயிக்கப் போவது இச் சமூக மக்கள்தான்.
தேர்தல் பணிக் குழுவில் மேலும் 6 பேர்:
இதற்கிடையே சாத்தான்குளம் இடைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் பணிக்குழுவில் மேலும் 6 பேரை முதல்வரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா சேர்த்துள்ளார்.
புதிதாக சேர்க்கப்பட்டுள்ளவர்கள்: திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ். மணியன், எஸ்.என். ராஜேந்திரன், கோகுல இந்திரா, தளவாய் சுந்தரம், வளர்மதிஜெபராஜ்.
ஏற்கனவே பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை தலைவராகக் கொண்டு தேர்தல் பணிக்குழு செயல்பட்டு வருகிறது. அந்தக் குழுவில்இடம் பெற்றுள்ள அனைவரும் அமைச்சர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக குறை கூறி வருகின்றன. இந்த நிலையில்தான் அமைச்சர் அல்லாத பிற நிர்வாகிகளும் தற்போது குழுவில்சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பார்வர்ட் பிளாக் ஆதரவு:
இதற்கிடையே சாத்தான்குளம் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்க அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி முடிவு செய்துள்ளது.
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில செயலாளர் எல். சந்தானம் இதனைத் தெரிவித்தார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications