தூக்குத் தண்டனை பெற்ற "அல்-உம்மா" கைதிகள் உயர் நீதிமன்றத்தில் "அப்பீல்"
சென்னை:
கோயம்புத்தூர் காவலர் செல்வராஜ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட8 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் உக்கடம் காவல் நிலையத்தைச் சேர்ந்த செல்வராஜ் கடந்த 1997ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதிபணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
அவர்களைத் தடுத்து நிறுத்திய செல்வராஜ் அபராதம் விதித்தார். இதையடுத்து அவருக்கும் மோட்டார் சைக்கிளில்வந்த 3 வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்து சென்ற அந்த 3 வாலிபர்களும் பெரும் கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு வந்தனர். காவலர்செல்வராஜை நடுரோட்டிலேயே வைத்து கண்டந்துண்டமாக வெட்டிக் கொன்றனர்.
இதையடுத்து ஏற்பட்ட வன்முறை மதக் கலவரமாக மாறியது. பஸ்கள் எரிக்கப்பட்டன, கடைகளும் வீடுகளும்சூறையாடப்பட்டன. இந்த வன்முறையை அடக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 பேர்கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக கோயம்புத்தூரில் 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்நடத்தப்பட்டது. அதில் 58 பேர் பலியாயினர். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
செல்வராஜ் கொலை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தக்கொலையில் தொடர்புடைய அல்-உம்மாவின் தலைவர் பாட்சாவின் மகன் சித்திக் அலி, அல்-உம்மா பொதுத்செயலாளர் முகம்மத் அன்சாரி உள்பட 9 பேரைக் கைது செய்தனர்.
இதில் ஷாகுல் ஹமீத் என்பவர் சிறையிலேயே இறந்துவிட்டார். மற்ற 8 பேர் மீதும் கோவை இரண்டாவது விரைவுநீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பிரேம் குமார் இந்த 8 பேருமே குற்றவாளிகள் தான் என்று கடந்த டிசம்பர்20ம் தேதி தீர்ப்பளித்தார். பின்னர் டிசம்பர் 23ம் தேதி அவர் இறுதித் தீர்ப்பை வழங்கினார். தன் தீர்ப்பில்,
செல்வராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான முகம்மது சபி, அபா, ஆசிக், அபுதாகிர் ஆகிய 4பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்த சித்திக் அலி, முகம்மது அன்சாரி, சம்சுதீன், தடா அஸ்லாம் ஆகிய 4பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ரூ. 25,000 அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதம் கட்டத் தவறினால்மேலும் ஒரு ஆண்டு தண்டனை வழங்கப்படும்.
மதரீதியில் மக்களையும், கோவையையும் இரண்டாகப் பிளக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே குற்றவாளிகள்இந்த செயலை செய்திருக்கிறார்கள். பணியில் இருந்த காவலரை ஈவு இரக்கமின்றி இவர்கள் கொலைசெய்துள்ளனர். இவர்களுக்கு தயவு தாட்சன்யம் காட்டக்கூடாது.
இந்த தண்டனையை எதிர்த்து இவர்கள் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்ய 30 நாட்கள் அவகாசம்தருகிறேன் என்று தன் தீர்ப்பில் நீதிபதி பிரேம்குமார் கூறினார்.
இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டு சரியாக 30 நாட்கள் ஆகியுள்ள நிலையில், தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளதண்டனையை எதிர்த்து எட்டு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடக்கும் என்று தெரிகிறது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications