வெடிகுண்டு வழக்கில் "அல்-உம்மா" பாஷா குற்றவாளி: தனி நீதிமன்றம் தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்க சதித் திட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட வழக்கில்அல்-உம்மா தலைவர் பாஷா உள்ளிட்ட 23 பேர் குற்றவாளிகளே என சென்னை தனி நீதிமன்றம் இன்றுதீர்ப்பளித்தது. குற்றம் சாட்டப்பட்ட மற்றொருவர் விடுவிக்கப்பட்டார்.

கடந்த 1998ம் ஆண்டு சென்னை கோடம்பாக்கம், வேப்பேரி, தாம்பரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் அல்உம்மா அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் ஏராளமான வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதுதொடர்பாக நடந்த விசாரணையில் கோடம்பாக்கம் பாலம் உள்பட சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில்வெடிகுண்டுகளை வெடிக்கச் சதித் திட்டம் தீட்டியது குறித்த விவரங்கள் தெரிய வந்தன.

இதைத் தொடர்ந்து அல் உம்மா தலைவர் பாஷா உள்ளிட்ட 24 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 வழக்குகளைத்தொடர்ந்தனர். இந்த வழக்குகள் சென்னை-பூந்தமல்லியில் உள்ள தனி நீதிமன்றத்தில் (பொடா) விசாரிக்கப்பட்டுவந்தன.

கடந்த 5 ஆண்டுகளாக நடந்த இந்த விசாரணையில் கடந்த 20ம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது.ஆனால் ஒத்திவைக்கப்பட்டு இன்று நீதிபதி ராஜேந்திரன் தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கு தொடர்பாக வழக்கு தொடரப்பட்ட 24 பேர்களில் 23 பேர் குற்றவாளிகளே என்று நீதிபதி ராஜேந்திரன்தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்ட மற்றொருவரை இவ்வழக்கிலிருந்து நீதிபதி விடுதலை செய்தார்.

இதையடுத்து குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் தண்டனை குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் நீதிபதிகூறினார்.

தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி அல்-உம்மா பாஷா உள்ளிட்ட 24 பேரும் இன்று பூந்தமல்லிக்குக் கொண்டுவரப்பட்டதால் நீதிமன்றத்துக்கு மிக பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.

இது தவிர பாஷா உள்ளிட்ட பலர் மீதும் கோயம்புத்தூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கும் விசாரிக்கப்பட்டுவருகிறது என்பது நினைவுகூறத்தக்கது.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+