கோஷ்டி பூசலுக்கு எதிராக உண்ணாவிரதம்: இது காங்ஸ்டைல்
சென்னை:
காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் கோஷ்டிப் பூசல் ஒழிந்து ஒற்றுமை நிலவ வேண்டும் என்று வலியுறுத்தி மூத்தகாங்கிரஸ் தலைவரும் யாருடனும் சேராமல் தனியே இருந்து வரும் ஒரு நபர் கோஷ்டியைச் சேர்ந்த தலைவர்முக்தா சீனிவாசன் தனது வீட்டிலேயே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.
படத் தயாரிப்பாளரும் எழுத்தாளருமான முக்தா சீனிவாசன் மூப்பனாரின் தீவிர விசுவாசியாக இருந்தார். அவரதுகோஷ்டியில் இருந்து வந்தார். அவரது மறைவுக்குப் பின் வேறு காங்கிரஸ் கோஷ்டிகள் எதிலும் சேரவில்லை.தனித்தே இருந்து வருகிறார்.
இந் நிலையில் சாத்தான்குளம் இடைத் தேர்தலில் திமுகவின் ஆதரவைப் பெறுவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்சோ. பாலகிருஷ்ணன் ஆதரவாளர்களுக்கும், செயல் தலைவர் இளங்கோவன் ஆதரவாளர்களுக்கும், மற்றும் சிலகோஷ்டிகளுக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
சோ.பா. ஆட்களை இளங்கோவன் திட்டுவதும், இளங்கோவன் ஆதரவாளர்களை கட்சியை விட்டே சோ.பாதூக்குவதுமாக சத்தியமூர்த்தி பவன் கலகலக்கிறது. கட்சியின் ஒழுங்குக் குழுவின் தலைவர் குமரி அனந்தனேசோ.பா. பக்கம் சாய்ந்துவிட்டார். இதனால் அவரை வைத்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறேன் எனஇளங்கோவனின் ஆதரவாளர்களை பதம் பார்த்து வருகிறார் சோ.பா.
இதனால் சத்தியமூர்த்தி பவனில் வெள்ளை வேட்டி, சட்டையில் யார் நுழைந்தாலும் வணக்கம் சார், நீங்க எந்தகோஷ்டி என்று விசாரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த கோஷ்டிப் பூசலால் வெறுத்துப் போய்விட்ட முக்தா சீனிவாசன் அதை எதிர்த்து இன்று வீட்டிலே.உண்ணாவிரதம் இருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் இந்த நிலையால், மக்கள் மத்தியில் அவப் பெயர் ஏற்படும் என்றும் எனவே காங்கிரஸ்தலைவர்கள் தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகள், கோஷ்டிப் பூசலை மூட்டை கட்டி வைத்து விட்டுஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் எனவும் முக்தா சீனிவாசன் கோரியுள்ளார்.
எனது இந்த உண்ணாவிரதத்தைப் பார்த்தாவது, காங்கிரஸ் தலைவர்களின் மனச்சாட்சி விழித்துக் கொள்ளும்என்றும், அவர்கள் தங்களுடைய கோஷ்டிப் பூசலைக் கைவிட்டு விட்டு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள் என்றுநம்புவதாகவும் அவர் கூறினார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications