கங்குலிக்கு பாக். தீவிரவாதிகள் கொலை மிரட்டல்
கொல்கத்தா:
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் செளரவ் கங்குலியைக் கொல்ல பாகிஸ்தானைச் சேர்ந்தலஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளது தெரிய வந்ததைத் தொடர்ந்துஅவருக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே தீவிரவாதிகளின் மிரட்டல் இருந்துகொண்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர், கங்குலிஉள்ளிட்ட முக்கிய வீரர்கள் அனைவருக்கும் ஏற்கனவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கங்குலியைத் தீர்த்துக் கட்ட லஷ்கர் தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக இந்திய உளவுத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். தீவிரவாதிகளின் டெலிபோன் செய்திகளை இடைமறித்துக் கேட்டபோது இதுதெரிய வந்துள்ளது.
இதையடுத்து கங்குலிக்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அவருடைய கொல்கத்தா வீட்டில்ஆயுதமேந்திய கமாண்டோ போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது கமாண்டோக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கங்குலியின் வீட்டை 24 மணி நேரமும்அவர்கள் கண்காணித்து வருவார்கள். கங்குலி காரில் வெளியே செல்லும்போது அதற்குப் பாதுகாப்பாககமாண்டோக்களின் வாகனங்களும் உடன் செல்லும்.
மேலும் கங்குலிக்கு சாதாரண உடையிலும் போலீசார் பாதுகாப்பு அளிக்கவுள்ளனர் என்று கொல்கத்தா போலீஸ்ஏ.எஸ்.பியான ராஜேஷ் சிங் இனறு நிருபர்களிடம் தெரிவித்தார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications