"கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை": காளிமுத்து குறித்து கருணாநிதி
சென்னை:
கவியரங்கங்களில் மன்னர்களை புகழ்ந்து கவி பாடும் கவிஞரைப் போல, முதல்வர் ஜெயலலிதா குறித்து ஆளுநர்ராமமோகன் ராவ் சட்டசபையில் புகழ்ந்து தள்ளியுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஆளுநர் உரை குறித்து இன்று கருணாநிதி நிருபர்களிடம் கூறுகையில், முதல்வரை முதல்வரே புகழ்ந்து கொள்வதுபோல அரசின் ஆளுநர் உரை அமைந்திருந்தது.
கவியரங்கங்களில் மன்னரைப் புகழ்ந்து கவிஞர்கள் வர்ணித்து கவி பாடுவது வழக்கம். அதுபோல ராமமோகன்ராவும் ஜெயலலிதாவைப் புகழ்ந்து வர்ணனை செய்துள்ளார்.
தமிழக சட்டசபையில் திமுக புறக்கணிப்பு செய்து வெளிநடப்பு செய்ததைக் கண்டிக்கும் தமிழக பா.ஜ.கவினர்,இதேபோல கர்நாடக பா.ஜ.கவினருக்கும் அறிவுரை கூறியிருந்தால் அங்கு மிகப் பெரும் அமளி துமளியை அந்தமாநில சட்டசபை சந்தித்திருக்காதே?
நாகப்பா என்ற ஒரு உயிருக்காக கர்நாடக பா.ஜ.கவினர் அம்மாநில சட்டசபையை அமளி, துமளி செய்துவிட்டனர். ஆனால் காவிரி டெல்டா பகுதியில் 12 உயிர்கள் செத்து மடிந்தும் கூட அது குறித்துத் தங்களுக்குக்கவலையில்லை என்று தமிழக பா.ஜ.கவினர் கூறுகிறார்களா?
கடந்த 25 ஆண்டு காலமாக ஆளுநர் உரையை தமிழில் படிக்கும் வாய்ப்பு, இந்த முறை சபாநாயகர்காளிமுத்துவிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது.
ஆனால் "கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை" என்பது போல மரபு, மாற்றம் என்றெல்லாம் பேசிதனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டுள்ளார் சபாநாயகர்.
இந்த ஆட்சியில் சட்டசபையில் ஆளுநர் உரையை தமிழில் படிக்கவும் தடையா? தமிழுக்கு இந்த ஆட்சியாளர்கள்கொடுக்கும் தகுதி இதுதானா என்று கேட்டார் கருணாநிதி.
கருணாநிதியை சந்தித்த பாஜக தலைவர்கள்:
இதற்கிடையே பா.ஜ.கவின் அகில இந்தியப் பொதுச் செயலாளரான இல. கணேசன், தமிழக பா.ஜ.க. தலைவர்கிருபாநிதி ஆகியோர் இன்று கருணாநிதியைச் சென்று சந்தித்து மத்திய தொழில் துறை அமைச்சர் முரசொலிமாறனின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
சென்னையில் இது தொடர்பாக இன்று நிருபர்களிடம் இல. கணேசன் கூறுகையில்,
திமுகவை நாங்கள் எப்போதும் எதிரிக் கட்சியாகவே கருதவில்லை. அந்த வகையில்தான் தமிழகத்தில் அந்தக்கட்சியுடன் உறவு இல்லாத நிலையிலும் இன்று கருணாநிதியைச் சென்று சந்தித்தோம்.
ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவர் வீட்டுக்குச் சென்று உடல் நலம் விசாரிப்பதுதான்மனிதாபிமானம்.
அதன்படிதான் உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் மாறனின் உடல் நலம் குறித்துகருணாநிதியைச் சந்தித்து கேட்டறிந்தோம். இதில் ஒன்றும் தவறு இருப்பதாக எனக்குப் படவில்லை.
இந்தச் சந்திப்பின்போது அரசியல் குறித்தும் பேசினோம். ஆனால் சாத்தான்குளம் இடைத் தேர்தல் குறித்தெல்லாம்நாங்கள் அவருடன் பேசவில்லை. சாத்தான்குளத்தில் பா.ஜ.க. போட்டியிடுவது குறித்து வரும் 29ம் தேதிஅதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றார் இல. கணேசன்.
பிரதமர் அலுவலக இணை அமைச்சரான விஜய் கோயல் சமீபத்தில் சென்னை வந்து கருணாநிதியைச் சந்தித்துவிட்டுச் சென்றார். அப்போது, தமிழக பா.ஜ.க. தலைவர்களை "அடக்கி" வைப்பதாக அவர் கருணாநிதியிடம் உறுதிஅளித்திருந்தார்.
இதைத் தொடர்ந்துதான் கணேசனும், கிருபாநிதியும் இன்று கருணாநிதியைச் சென்று சந்தித்துள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications