இலங்கை அமைதி குழு தலைவரை மாற்றியது நார்வே
கொழும்பு:
இலங்கையில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவராக இருந்து வந்த மேஜர் ஜெனரல் டிரோண்ட்புருஹோவ்டே மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஜெனரல் டிரிஜ்வே டெல்லப்சென் என்பவரை நார்வேநியமித்துள்ளது.
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நார்வே அரசின்உதவியுடன் நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து போர்நிறுத்த நடவடிக்கைகளைக் கவனிப்பதற்காகக் கண்காணிப்புக் குழு ஒன்றையும் நார்வேஏற்படுத்தியது. இதன் தலைவராக டிரோண்ட் நியமிக்கப்பட்டார். இவர் நார்வே ராணுவத்தின் முன்னாள்தலைவராவார்.
ஆனால், இவர் மீது புலிகள் அதிருப்தியில் இருந்து வந்தனர். யாழ்பாணத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர்களின்வீடுகளை இலங்கை ராணுவத்தினர் காலி செய்ய வேண்டும் என்ற புலிகளின் கோரிக்கையை புருஹோவ்டேஎதிர்த்தார். இதனால் இவரைக் கடுமையாக விமர்சித்து வந்த புலிகள், உடனே இவரை மாற்றக் கோரியும்நார்வேயிடம் வாதாடினர்.
இந் நிலையில் புருஹோவ்டேயின் ஓராண்டுப் பதவிக் காலம் முடிவடைவதைதுள்ளது. இதையடுத்து இவருக்குப்பதவி நீட்டிப்புத் தராமல் அவரை நார்வே மாற்றியுள்ளது.
அவருக்குப் பதிலாக டெல்லப்சென் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் பிப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாதத்துவக்கத்தில் இவர் இலங்கை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் அமைதியை ஏற்படுத்தியதில் புருஹோவ்டே பெருமளவில் உதவியுள்ளதாக நார்வே தூதரகம்இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
டெல்லப்சென்னும் நார்வே ராணுவத்த்தில் மூத்த அதிகாரியாக இருந்தவர் தான். சர்வதேச அளவில் பல அமைதிநடவடிக்கைகளிலும் சிறப்பாகப் பணியாற்றியவர். கடந்த 1997 முதல் 2001 வரை எகிப்து மற்றும் இஸ்ரேல்இடையேயான அமைதிக் குழுவின் கமாண்டராகப் பணியாற்றியுள்ளார்.
1994ல் மாசிடோனியாவில் ஐ.நா. படையின் ஜெனரல் கமாண்டராகவும் இவர் இருந்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications