பட்டினிச் சாவுகள் நடக்கவில்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம்
சென்னை:
தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பட்டினிச் சாவுகள்நிகழவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது.
காவிரி டெல்டாப் பகுதிகளில் நடக்கும் பட்டினிச் சாவுகளை தடுத்து நிறுத்திட வேண்டும் என்றும் விவசாயிகளுக்குதினசரி 500 கிராம் அரிசி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வக்கீல் நடராஜன் என்பவர் சென்னைஉயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
ஏற்கனவே, பட்டினிச் சாவுகள் விஷயத்தில் நீதிமன்றம் தமிழக அரசுக்கு சூடு கொடுத்துள்ளது. பட்டினிச் சாவுகள்நடப்பதை அனுமதிக்கும் இந்த அரசு மக்கள் நல அரசு தானா? என்று கேள்வி எழுப்பி இருந்தது.
இந் நிலையில் பட்டினிச் சாவுகள் குறித்த பொது நல வழக்கு இன்று நீதிபதிகள் ஜெயசிம்ம பாபு மற்றும்பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் என்.ஆர். சந்திரன் ஆஜராகி வாதாடினார். தன்னுடையவாதத்தில்,
பத்திரிக்கைச் செய்திகளை மட்டும் அடிப்படையாக வைத்து, உண்மை நிலவரம் தெரியாமல் மனுதாரர் இந்தவழக்கை தாக்கல் செய்துள்ளார். எனவே இது விசாரணைக்கே உகந்ததல்ல. காவிரி டெல்டாப் பகுதிகளில் வறட்சிநிவாரணப் பணிகளை அரசு முழு வீச்சில் மேற்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு இலவச உணவு அளிக்கப்பட்டுவருகிறது.
இதுதொடர்பாக அரசு எடுத்துள்ள மற்ற நடவடிக்கைகள் குறித்து பதில் மனுவில் விரிவாக தெரிவிக்கப்படும்.
காவிரி டெல்டாப் பகுதிகளில் நடந்துள்ள சாவுகள் பட்டினிச்சாவுகள் அல்ல. இதுதொடர்பாகவும் அரசுத் தரப்பில்விளக்கம் தரப்படும்.
மேலும் விவசாயிகளுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றார்சந்திரன்.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும், அப்போது அரசு பதில்மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications