சாத்தான்குளம்: அதிமுக தேர்தல் பணிக் குழுவில் மேலும் 6 பேர்
சென்னை:
சாத்தான்குளம் இடைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் பணிக்குழுவில் மேலும் 6 பேரை முதல்வரும், அக்கட்சியின்பொதுச் செயலாளருமான ஜெயலலிதா சேர்த்துள்ளார்.
புதிதாக சேர்க்கப்பட்டுள்ளவர்கள்: திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ். மணியன், எஸ்.என். ராஜேந்திரன், கோகுலஇந்திரா, தளவாய் சுந்தரம், வளர்மதி ஜெபராஜ்.
ஏற்கனவே பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை தலைவராகக் கொண்டு தேர்தல் பணிக்குழுசெயல்பட்டு வருகிறது. அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள அனைவரும் அமைச்சர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக குறை கூறி வருகின்றன. இந்த நிலையில்தான் அமைச்சர் அல்லாத பிறநிர்வாகிகளும் தற்போது குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவினர் விண்ணப்பம்:
இதற்கிடையே சாத்தான்குளம் இடைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் இன்று தங்கள்விண்ணப்பங்களைப் பெற்றனர்.
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மட்டுமே விண்ணப்பம் வழங்கப்படும் என்றுஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று நூற்றுக்கணக்கான அதிமுகவினர் தலைமை அலுவலகத்தில் கூடினர். போட்டியிட விரும்பும்ஒவ்வொருவரும் ரூ.10,000 பணம் செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டனர்.
இன்று மாலை வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று அதிமுக மகளிரணித் தலைவரான சுலோசனா சம்பத்தெரிவித்தார்.
பார்வர்ட் பிளாக் ஆதரவு:
இதற்கிடையே சாத்தான்குளம் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்க அகில இந்தியபார்வர்ட் பிளாக் கட்சி முடிவு செய்துள்ளது.
கட்சியின் இளைஞர் அணி மாநாடு மதுரையில் நடந்தது. அப்போது ஆளும் அதிமுகவுக்கு சாத்தான்குளம் இடைத்தேர்தலில் ஆதரவு தர முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், விவசாயிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச உணவுக்குப் பதில் அரிசி வழங்கவும், இலவசமின்சாரத்தைத் தொடர்ந்து வழங்கவும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில செயலாளர் எல். சந்தானம் தலைமை வகித்தார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications